மான்டென்குரோவில் உள்ள புத்வா நகரில் இளையோருக்கான 30-வது அட்ரியாட்டி பியர்ல் குத்துச் சண்டை போட்டி நடைபெற்றது.இந்தத் தொடரின் கடைசி நாளான நேற்று மகளிருக்கான 51 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பேபிரோஜி சானுவும், 69 கிலோ எடை பிரிவில் அருந்ததி சவுத்ரியும் தங்கப் பதக்கம் வென்றனர்.
சானு இறுதிப் போட்டியில் 3-2என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் சபீனா போபோகுலோவாவையும் அருந்ததி சவுத்ரி 5-0 என்றகணக்கில் உக்ரைனின் மரியானா ஸ்டோய்கோவையும் வீழ்த்தினர். 64 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லக்கி ராணா வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
நேற்றுடன் நிறைவு பெற்ற இந்தத் தொடரில் இந்தியா 12 பதக்கங்களை வென்று பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தது. உஸ்பெகிஸ்தான் முதலிடத்தை கைப்பற்றியது. இந்திய அணி சார்பில் மகளிர் பிரிவில் வினிகா (60 கிலோ எடை பிரிவு), சனமச்சா சானு (65 கிலோ எடை பிரிவு), அல்ஃபியா பதான் ( 81 கிலோ எடை பிரிவு) ஆகியோர் தங்கம் வென்றிருந்தனர்.
இவர்களுடன் கிதிகா (48 கிலோ எடை பிரிவு), ராஜ் ஷகிபா (75 கிலோ எடை பிரிவு) ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், நேகா (54 கிலோ எடை பிரிவு), பிரீத்தி (57 கிலோ எடை பிரிவு) ஆகியோர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தனர். ஆடவர் பிரிவில் பிரியான்ஷு (49 கிலோஎடை பிரிவி), ஜுகுனோ ( 91கிலோ எடை பிரிவு) ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்றிருந்தனர். மகளிர் பிரிவில் தொடரின் சிறந்த வீராங்கனையாக வினிகா தேர்வு செய்யப்பட்டார்.
ஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிஈஸ்ட் பெங்கால் – நார்த் ஈஸ்ட் யுனைட்டெடு
நேரம்: இரவு 7.30
இடம்: கோவாநேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago