நாடு சுதந்திரம் அடைந்த பிறகு காஷ்மீரில் தேசிய மாநாடு கட்சியும் காங்கிரஸும் பிரதான கட்சிகளாக இருந்தன. காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த முப்தி முகமது சையது 1998-ம்ஆண்டில் மக்கள் ஜனநாயக கட்சியை (பிடிபி) தொடங்கினார். காஷ்மீர் முதல்வர், மத்திய அமைச்சர் பதவி வகித்த அவர் 2016-ம் ஆண்டு ஜனவரியில் காலமானார்.
அதன்பின் முப்தி முகமதுவின் மகள் மெகபூபா முப்தி பிடிபி கட்சித்் தலைவரானார். கடந்த 2015-ல் பாஜகவும் பிடிபி-யும் கூட்டணி அமைத்து காஷ்மீரில் ஆட்சி அமைத்தன. இந்த கூட்டணி கடந்த 2018 ஜூனில் உடைந்து, ஆட்சி கவிழ்ந்தது.
எனினும் கட்சியை முப்தி தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார். இந்த பின்னணியில் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் மெகபூபா முப்தி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 3 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago