அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் தடையை மீறி, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் இந்த மசோதாவை சட்டமாக அங்கீகரித்தனர்.
இந்தியாவின் லடாக் எல்லையை ஒட்டிய சில பகுதிகளை சொந்தம் கொண்டாடி கடந்த ஆண்டு மே மாதம் முதலாக சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவுடன் மட்டுமின்றி இந்தோ – பசிபிக்கில் உள்ள சில நாடுகளுடனும் இதுபோன்ற ராணுவ அத்துமீறலில் சீனா ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ராணுவ மசோதா ஒன்றை அமெரிக்க நாடாளுமன்ற எம்.பி.க்கள் கடந்த டிசம்பர் மாதம் கொண்டு வந்தனர். இந்த மசோதா சட்டமாக மாறினால், சீனாவின் அத்துமீறல்கள் நடைபெறும் நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது படைகளை அனுப்ப முடியும்.
ஆனால், இந்த மசோதா சட்டமாக மாறினால் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி, இதனை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தமது அதிகாரத்தை பயன்படுத்தி நிறுத்தி வைத்திருந்தார். இந்த சூழலில், அதிபர் ட்ரம்ப்பின் தடையை மீறி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் இந்த மசோதாவை நேற்று சட்டமாக முன்மொழிந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago