இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று காலை உடற்பயிற்சியில் கங்குலி ஈடுபட்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் கங்குலி சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் கங்குலியை பரிசோதனை செய்த பிறகு, அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, கங்குலிக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது.
இதுகுறித்து மருத்துவமனை டாக்டர் அஃபாத் கான் கூறியதாவது: கங்குலிக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவருடைய உடல்நிலை தற்போது சீராக உள்ளது. கங்குலி முற்றிலும் சுயநினைவுடனே இருக்கிறார். 24 மணி நேரம் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார். அவரது இதயத்தில் 2 அடைப்புகள் உள்ளன. அதற்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்படும். அவர் அபாய கட்டத்தில் இல்லை, நன்றாக பேசுகிறார். இவ்வாறு டாக்டர் அஃபாத் கான் கூறினார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கங்குலிக்கு லேசானமாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனும் செய்தியைக் கேட்கவேவருத்தமாக இருக்கிறது. அவர் விரைந்து நலம்பெற வாழ்த்துகிறேன். அவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்காகவும் எனது பிரார்த்தனைகள் தொடரும்” என்றுதெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago