மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
துரதிருஷ்டவசமாக அடுத்த 4 அல்லது 6 மாதங்களில் கரோனா வைரஸ் தொற்று உலகளவில் மிகமோசமாக இருக்கும். அதை ‘இன்ஸ்டிடியூட் பார் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் எவலூசன்’ (ஐஎச்எம்இ) அமைப்பு கணித்துள்ளது. இதன்படி 2 லட்சம் கூடுதல் உயிரிழப்புகள் நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கை விதிமுறைகளைப் பின்பற்றினால், அதிக உயிரிழப்புகளை தடுக்கலாம்.
கடந்த சில வாரங்களில் அமெரிக்காவில் கரோனா பாதிப்பும் உயிரிழப்பும் அளவுக்கதிகமாக சென்றுள்ளது. இதை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு ஏதாவது செய்தாக வேண்டும். மருத்துவத் தேவையின் அடிப்படையில் கரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும். அதை ஒரு ஆடம்பரப் பொருளாக அல்லது உடல்நலம் நன்றாக இருப்பவர்களுக்கும் வழங்கக் கூடாது.
இவ்வாறு பில் கேட்ஸ் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago