உ.பி.யில் ராமர் கோயிலுக்கான அஸ்திவாரம் அமைக்கும் பணியை மேற்பார்வையிட 8 உறுப்பினர்கள் கொண்ட நிபுணர் குழுவை கட்டுமானக் குழு அமைத்துள்ளதாக அயோத்தி பாஜக எம்எல்ஏ வேத் குப்தா தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
டெல்லி ஐஐடி முன்னாள் இயக்குநர் வி.எஸ்.ராஜு தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ரூர்க்கி சிபிஆர்ஐ இயக்குநர் என்.கோபாலகிருஷ்ணன், சூரத் என்ஐடி இயக்குநர் எஸ்.ஆர்.காந்தி, குவாஹாத்தி ஐஐடி இயக்குநர் டி.ஜி.சீதாராம், டெல்லி ஐஐடி பேராசிரியர் பி.பட்டாச்சார்ஜி, டிசிஐ ஆலோசகர் ஏ.பி.முல், சென்னை ஐஐடி-யின் மனு சந்தானம், மும்பை ஐஐடி-யின் பிரதீப்த் பானர்ஜி ஆகியோர் இதன் மற்ற உறுப்பினர்களாக இருப்பார்கள்.
அஸ்திவார வடிவமைப்பை இக்குழு மறு ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்கும். இவ்வாறு வேத் குப்தா கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago