ஸ்ரேயஸ் ஐயருக்கு வெளிநாட்டில் அறுவை சிகிச்சை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனான ஸ்ரேயஸ் ஐயர் தனது முதுகு வலி காயத்துக்கு வெளிநாட்டில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார்.

ஸ்ரேயஸ் ஐயர், கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றார். அப்போது முதுகு வலி காயம் காரணமாக 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரிலும் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், முதுகு வலி காயத்துக்கு ஸ்ரேயஸ் ஐயர் வெளிநாட்டில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும். இதனால் அவர் அடுத்த 5 மாதங்களுக்கு எந்தவித கிரிக்கெட் போட்டியிலும் விளையாட மாட்டார் என்றும் பெயர் கூற விரும்பாத பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இதனால் ஸ்ரேயஸ் ஐயர், ஐபிஎல் தொடரின் முழு சீசனிலும், ஜூன் மாதம் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்