தென் மாவட்டத்துக்கு வராத அன்புமணி ராமதாஸ் :

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

பாமக வேட்பாளர்கள் போட்டியிடும் வட மாவட்டங்களில் மட்டுமே வாக்குச் சேகரித்துவரும் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், கோ.க. மணி உள்ளிட்டோர் தென் மாவட்டம் பக்கம் வராததால் அக்கட்சியின் வேட்பாளர்கள் சோர்வடைந்துள்ளனர்.

பாமக ஆரம்பித்த காலம் முதலே அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் வடமாவட்டங்களில் மட்டுமே கட்சியை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார்.

தர்மபுரி, சேலம், விழுப்புரம், அரியலூர், கடலூர், கள்ளகுறிச்சி, திருப்பத்தூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரளவு செல்வாக்குள்ள கட்சியாக பாமக வளர்ந்தது. ஆனால் தென்மாவட்டங்களில் வன்னியர்கள் அதிகம் இல்லாததால் அங்கு கட்சியை வளர்க்க ஆர்வம் காட்டவில்லை என அக்கட்சி மூத்த நிர்வாகிகள் மீது நெடுங்காலமாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த தேர்தலில் வட மாவட்டங்களிலேயே பாமக அதிக சீட்டுகளை பெற்றது.

தென் மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் மட்டும் பாமக போட்டியிடுகிறது. இந்தமுறை தென் மாவட்டத்தில் கூட்டணிவேட்பாளர்களுக்கு வாக்குச் சேகரிக்க அன்புமணி ராமதாஸ், கோ.க.மணி வருவர் என பாமகவினர் எதிர்பார்த்தனர்.

மதுரையில் பிரதமர் நேற்று பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு ஆத்தூரில் பிரச்சாரத்துக்குச் செல்வதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர்களின் வருகை ரத்தானது. இதனால் பாமகவினர் சோர்வடைந்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை மாநகர தெற்குமாவட்டச் செயலாளர் பாலமுருகனிடம் கேட்டபோது, ‘‘ ஆத்தூர் தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய அன்புமணி ராமதாஸ், கோ.க.மணி உள்ளிட்டோர் வர இருந்தனர். கடைசி நேரத்தில் ஏனோ அவர்கள் வரவில்லை. இனியும் அவர்கள் வர வாய்ப்பில்லை’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்