மீண்டும் கிளம்பும் கிரானைட் பூதம் : குவாரிகள் திறப்பு வாக்குறுதியை கைவிட்ட திமுக :

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரையில் கிரானைட் குவாரிகள் திறப்பு வாக்குறுதியால் திமுக வேட்பாளர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் மதுரை ஒத்தக்கடையில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியபோது, கிரானைட் குவாரிகள் மூடல், தொழிலாளர் வேலையிழப்பு பற்றிய குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. குவாரிகள் திறக்கப்படாததால் தொழிலாளர்கள் சிரமப்படுவதாகவும், விரைவில் திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனால் மூடப்பட்ட குவாரிகளை திறக்க ஸ்டாலின் வாக்குறுதி அளிக்கிறாரா என்று, குவாரிகளால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் திமுகவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக, தற்போது கிரானைட் குவாரிகள் பற்றி வாய் திறப்பதில்லை. அதன்பிறகு மதுரையில் பிரச்சாரத்துக்கு வந்த ஸ்டாலினும் கிரானைட் குவாரிகள் பற்றி பேசவில்லை.

மதுரை மாவட்ட திமுக வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரத்திலும் கிரானைட் குவாரி பற்றிய வாக்குறுதிகள் இடம் பெறவில்லை.

ஆனால், ஸ்டாலின் பிரச்சாரத்தில் இடம் பெற்ற கிரானைட் குவாரி குறும்பட விஷயத்தை அதிமுக வேட்பாளர்கள் கையில் எடுத்துக் கொண்டு, திமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளனர்.

மதுரை கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன், தனது பிரச்சாரத்தில் ‘‘கடந்த 10 ஆண்டாக குவாரிகளால் எந்த தொந்தரவும் இல்லாமல் கிராம மக்கள் நிம்மதியாக வசிக்கின்றனர். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குவாரிகள் மீண்டும் திறந்து விடப்பட்டு கனிம வளங்கள் கொள்ளை போகும். கிராமங்கள் காலியாகும் நிலைமை ஏற்படும்" எனப் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்தப் பிரச்சாரம் மக்களிடம் எடுபடுவதால், திமுக வேட்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்