திமுக கூட்டணியில் மதிமுக, கம்யூனிஸ்ட்கள் உட்பட கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதில், மார்க்சிஸ்ட் கட்சி இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்பதால் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதால் 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வழங்கியதுபோல 12 தொகுதிகள் தரவேண்டும் என்று திமுக குழுவிடம் தெரிவித்தோம்.
ஆனால், திமுக தரப்பில் ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள் தருவதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், இரட்டை இலக்கத்தில்தான் தொகுதிகள் வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இதர கட்சிகளுடன் ஆலோசித்து அழைப்பதாக தெரிவித்தனர்’’ என்றனர்.
மறுபுறம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கும் அளவுக்கு தங்களுக்கும் தொகுதிகளை அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கோரி வருகிறது. மேலும், திமுக அணியில் உரிய அங்கீகாரம் இல்லாத பட்சத்தில் மாற்று முடிவுகளை கையாளவும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பரிசீலனை செய்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏதும் இல்லை. பேச்சுவார்த்தை சுமூகமாகவே நடக்கிறது’’என்று கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago