அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, தேர்தல் பணியை முன்கூட்டியே தொடங்கும் எண்ணத்தில் பேச்சுவார்த்தைக்கு அழையுங்கள் என அதிமுகவுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. இருப்பினும் இன்னும் அழைத்தபாடில்லை.
இதனிடையே பிற கட்சிகளைப் போன்று தேமுதிகவும் சென்னையில் நேற்று முதல் விருப்ப மனுக்களை வாங்கி வருகிறது. மதுரைக்கு மட்டும் ஒரே நாளில் 15-க்கும் மேற்பட்டோர் மனுக்கள் கொடுத்துள்ளனர். மாநில நிர்வாகி முஜிபுர் ரகுமான் மதுரை மத்திய தொகுதிக்கும், வடக்கு தொகுதிக்கும் மனு கொடுத்துள்ளார். தென்மாவட்ட அளவில் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் மனு வழங்கியதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கூட்டணி தொடர்பாக தேமுதிக முக்கிய நிர்வாகிகள் கூறுகையில், ‘‘இப்போது வரை அதிமுக கூட்டணியில் இருக்கிறோம். அதே சமயம் திமுக கூட்டணிக்கும் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு மரியாதை முக்கியம். அதிமுக கூட்டணியில் 10, 15 தொகுதிகள் வாங்குவதைவிட, தனித்து நிற்பது மேலானது. இதனால் எங்கள் தன்மானமாவது மிஞ்சும். கடந்த எம்.பி. தேர்தலில் விருதுநகரில் நாங்கள்தோற்கக் காரணம் அமமுக தான். பல தொகுதிகளில் அதிமுக, கூட்டணி வேட்பாளர்கள் தோல்விக்கும் அமமுகவே காரணம். அமமுகவை ஒன்றிணைக்கவில்லை என்றால், அதிமுக தோல்வியை சந்திக்க வாய்ப்பு உள்ளது ’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago