கருணாநிதி, ஜெயலலிதாவுக்குப் பிறகு தமிழக அரசியலில் திமுக, அதிமுகவில் வாரிசு அரசியல் பெரிய அளவில் தலைதூக்கி வருகிறது. திமுகவில் எப்போதும் வாரிசு அரசியலுக்குப் பஞ்சம் இருக்காது. தற்போது அது உச்சத்தில் உள்ளது. இந்த சட்டசபைத் தேர்தலிலும் வாரிசுகள் அதிகளவு போட்டியிடத் தயாராகி வருகிறார்கள். அதனால், இவர்கள் போட்டியிட உள்ள தொகுதிகளில் உள்ள கட்சி நிர்வாகிகள் ‘சீட்’ கிடைக்க வாய்ப்பு இல்லாதது தெரிந்து தற்போதே சோர்வடைந்து போய் உள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கிவிட்டனர். இது கட்சிக்கும், தொண்டர்கள் மத்தியிலும் உற்சாகத்தைத் தந்தாலும் உதயநிதி ஸ்டாலின் செல்லும் இடங்களில் கட்சி நிர்வாகிகள் அளிக்கும் முக்கியத்துவமும், வரவேற்பும் தேர்தல் நெருங்கும்நிலையில் திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தேனி, திண்டுக்கல் வந்தஉதயநிதிக்கு கட்சியினர், போஸ்டர், பிளக்ஸ் பேனர் உள்ளிட்ட விளம்பரங்கள் முதல் வரவேற்பு வரை ஸ்டாலினை விடஅதிக முக்கியத்துவம் அளித்தனர்.அதன் உச்சமாக திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும், திண்டுக்கல்கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் கட்சியினர் 100 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட மாலையைகிரேன் மூலம் உதயநிதிக்குப் போட்டு வரவேற்பு வழங்கியுள்ளனர்.
ஐ.பி.செந்தில்குமாரும், உதயநிதியும் கட்சியைத் தாண்டி நெருங்கிய நண்பர்கள். உதயநிதி தென்மாவட்டங்களில் சினிமா படப்பிடிப்புக்கு வரும்போதெல்லாம் ஐ.பி.செந்தில்குமார் அவருடன் செல்வது வழக்கம். அந்த நெருக்கத்தை வெளிப்படுத்தவும், கட்சியில் தனக்கான இடத்தைத் தக்க வைக்கவும் ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் வந்த உதயநிதிக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்துஅசத்தினார். இது போலவே உதயநிதி போகும் இடமெல்லாம் வரவேற்பு கொடுத்து அசத்துகிறார்கள்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago