தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக சரஸ்வதி ரங்கசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 6 உறுப்பினர்களையும் புதிதாக நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
போக்சோ சட்டத்தை கண்காணிக்கும்
தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த2013-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தை அமல்படுத்துவதை கண்காணிக்கும் பொறுப்பு ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்த ஆணையத்தின் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நிர்மலா, கடந்த ஆண்டு ஜன.8-ம் தேதியுடன் ஓய்வுபெற்றார். உறுப்பினர் பதவிகளும் கடந்த ஆண்டு மே மாதம் காலி யானது.
இந்நிலையில், ஆணைய தலைவராக சரஸ்வதி ரங்கசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், ‘‘தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக சரஸ்வதி ரங்கசாமி, உறுப்பினர்களாக எஸ்.மல்லிகை, கே.துரைராஜ், வி.ராமராஜ், சரண்யா ஜெயக்குமார், ஜெ.நந்திதா, ஐ.முரளிகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்’’ என்று கூறப்பட்டுள்ளது.
முதல்வரிடம் வாழ்த்து
சரஸ்வதி ரங்கசாமி, ஏற்கெனவே இப்பதவியில் 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே, முதல்வர் பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, சரஸ்வதி ரங்கசாமி வாழ்த்து பெற்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago