கமலா ஹாரிஸ் தந்திருக்கும் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டிலிருந்தும், இந்தியாவின் இன்ன பிற மாநிலங்களிலிருந்தும் உயர் படிப்புக்காகவும் வேலைக்காகவும் பிற நாடுகளுக்குச் சென்றவர்கள் தங்களின் சீரிய முயற்சியால் அந்த நாடுகளின் குடியுரிமை பெற்றிருக்கிறார்கள்; அரசு சார்ந்த உயர் பதவிகளில் வீற்றிருக்கிறார்கள். இந்நிலையில், இந்தியா மீதான அந்தந்த நாடுகளின் பார்வையிலும் சாதகமான மாற்றங்கள் உருவாகிவருகின்றன. மறைந்த சிங்கப்பூர் அதிபர் செ.ரா. நாதன், அயர்லாந்தின் முன்னாள் அதிபர் லியோ வரத்கர், போர்ச்சுக்கலின் நிகழ்கால முதன்மை அமைச்சர் அந்தோனியோ டி கோஷ்டா மற்றும் பல ஆப்பிரிக்க, அமெரிக்க நாடுகளின் இந்தியக் குடும்பப் பின்னணியுடைய அரசியல் தலைவர்களால், இந்தியாவுக்குச் சாதகமான பல நிகழ்வுகள் நடந்துள்ளன. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் கணியன் பூங்குன்றனின் வாக்கை இதுநாள் வரை ஐநாவின் நியூயார்க் நகர அலுவலகத்தில் காணப்பெற்றோம். அதற்கு எடுத்துக்காட்டாக கமலா ஹாரிஸ் தனது மக்கள் பணியை ஆற்றுவார் என்று நம்புவோம்.

- ம.ஆ.நெப்போலியன், சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்