புதுச்சேரி அரசின் சாலைப் போக்குவரத்துக் கழகம் சார்பில் புதுச்சேரி - பெங்களூர் இடையே தினசரி பேருந்து சேவை இருந்து வந்தது. ஐ.டி ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் அவசிய தேவையாக இருந்த இந்த பேருந்து வசதி, கரோனா நோய் தொற்று காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்தது.
7 மாதங்களுக்குப் பிறகு தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக மீண்டும் புதுச்சேரி - பெங்களூர் இடையே பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. பயணக் கட்டணம் ரூ.275. முன்பதிவிற்கு ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த அரசுப் பேருந்து புதுச்சேரியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படுகிறது. இதே பேருந்து பெங்களூரில் இருந்து தினமும் நண்பகல் 12.30 மணிக்கு புறப்படும்.
இந்த பேருந்தில் அரசு உத்தரவுப்படி அதிகபட்சமாக 33 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பிஆர்டிசி முன்பதிவு அலுவலகம் மற்றும் ஆன்லைன் மூலம் போகவும், வரவும் பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என சாலைப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago