உயிருடன் புதைக்கப்பட்டேன்; தெரு நாய்கள் காப்பாற்றின - இளைஞர் புகார் மீது விசாரணை

By செய்திப்பிரிவு

ஆக்ரா: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் ரூப் கிஷோர் (24). இவர் அங்குள்ள காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், “கடந்த ஜூலை 18-ம் தேதி ஆக்ராவின் அர்டோனி பகுதியில் அங்கித், கவுரவ், கரண், ஆகாஷ் ஆகிய 4 பேர் நிலத்தகராறில் என்னை தாக்கி, என்னை தங்கள் பண்ணையில் உயிருடன் புதைத்து விட்டனர்” என்று கூறியுள்ளார்.

அவர் புதைக்கப்பட்ட இடத்தில்தெருநாய்கள் கூட்டம் தோண்டத் தொடங்கியது. ரூப் கிஷோரின் சதையை நாய்கள் கடித்ததில் அவருக்கு சுயநினைவு திரும்பியது. இதையடுத்து குழியில் இருந்து எழுந்த அவர் உள்ளூர்மக்கள் உதவியுடன் மருத்துவமனையில் சேர்ந்தார். ரூப் கிஷோரை வீட்டிலிருந்து 4 பேர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதாக அவர் தாயார் குற்றம்சாட்டினார்.

ரூப் கிஷோர் புகார் தொடர்பாக ஆக்ரா போலீஸார்தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் பொருட்டு தலைமறைவாக இருக்கும் 4 பேரையும் பிடிக்க முயன்று வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்