Street View | இந்தியா முழுவதும் கூகுள் அறிமுகம் செய்த புதிய அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: கூகுள் ஸ்ட்ரீட் வியூ, சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் என பல இடங்களின் 360 டிகிரி கோண வியூவை வழங்கி வருகிறது. தற்போது இந்த அம்சம் இப்போது இந்தியாவில் பல இடங்களில் பயன்பாட்டுக்கு கிடைக்கிறது.

இந்த அம்சத்தை கூகுள் நிறுவனம் 2016-ல் அறிமுகம் செய்தது. இருந்தாலும் இந்தியாவில் இந்த அம்சம் கூகுள் மேப்ஸில் கடந்த ஆண்டு அறிமுகமானது. இருந்தபோதும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு சில இடங்களில் மட்டுமே பயன்பாட்டுக்கு கிடைத்து வந்தது. தற்போது இந்தியாவில் பெரும்பாலான லொகேஷனை ஸ்ட்ரீட் வியூ அம்சத்தில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் செயலி மற்றும் வெப் வெர்ஷனில் இதை பயன்படுத்தலாம். இந்த அம்சத்தின் மூலம் பொது இடங்களை மட்டும்தான் பார்க்க முடியும்.

இப்போதைக்கு இந்த அம்சத்தின் மூலம் ஒரு இடத்தின் 360 டிகிரி வியூவை மட்டுமே பார்க்க முடியும். இதன் மூலம் கூகுள் மேப்ஸில் ரியல் டைம் வழிகாட்டி (டேடெக்‌ஷன்ஸ்) உதவியை பெற முடியாது. இந்த அம்சத்தை தற்போது கூகுள் சோதித்து பார்த்து வருகிறது. இது இமர்சிவ் (Immersive) வியூ என அறியப்படுகிறது.

பயன்படுத்துவது எப்படி?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE