பிக்சல் ஃபோல்ட் | கூகுளின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

By செய்திப்பிரிவு

சான் பிரான்சிஸ்கோ: கூகுள் நிறுவனம் தனது முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ‘பிக்சல் ஃபோல்ட்’ போனை வரும் 10-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இது குறித்த தகவலை கூகுள் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. வீடியோ டீஸர் மூலம் இதனை கூகுள் தெரிவித்துள்ளது.

கூகுளின் ஐ/ஓ நிகழ்வில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிக்சல் ஃபோல்ட் போனின் செகண்ட்ரி டிஸ்ப்ளே 5.80 இன்ச் திரை அளவை கொண்டுள்ளது. பிரதான திரையின் அளவு 7.60 இன்ச். இந்த போன் ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. ப்ரீமியம் ரக போனாக வெளிவரும் இந்த போனின் விலை சாம்சங் கேலக்சி எஸ்23 அல்ட்ரா போனுக்கு நிகரான விலையை கொண்டிருக்கும் என தெரிகிறது.

வரும் மே 11-ம் தேதி கூகுள் நிறுவனம் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் இந்த போன் அறிமுகமாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE