‘உனது பெருந்துயரம் என்ன?’ - மனிதரைப் போல் முகபாவனைகளுடன் பதிலளித்து வியக்கவைத்த ரோபோ

By செய்திப்பிரிவு

லண்டன்: பிரிட்டரினின் இன்ஜினியரிங் ஆர்ட்ஸ் என்ற ரோபோடிக்ஸ் நிறுவனம் தயாரித்த அமேகா என்ற பெயர் கொண்ட அதிநவீன ஹியூமனாய்ட் ரோபோ ஒன்று கேள்விகளுக்கு உணர்வுபூர்வமான பதில்களைக் கொடுத்து அனைவரையும் வியக்கவைத்துள்ளது. விடை மட்டுமல்ல, அதன் முகப்பாவனைகளும் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமேகா ரோபோவின், அறிமுக நிகழ்வில் கலந்து கொண்ட சிலர் இந்த ரோபோ மனித குலத்திற்கே சவாலாக வருமோ என்ற கவலை ஏற்படுவதாக தெரிவித்தனர். அமேகாவை உருவாக்கிய நிறுவனத் தலைவர் வில் ஜேக்சன் 'டெய்லி ஸ்டார்' பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில் "அமேகாவின் பேச்சுத் திறன் ஜிபிடி3 (GPT-3) தொழில்நுட்பத்தால் சாத்தியமாகியுள்ளது என்றார். அதனால் தான் உங்கள் கேள்விக்கு பதில் அமேகா தூண்டப்பட்டது. நாங்கள் ஜிபிடி4 தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியுள்ளோம்" என்றார்.

அறிமுக விழாவில் பத்திரிகையாளர் ஒருவர் உன் வாழ்வின் மிகத் துயரமான நாள் எதுவாக இருக்கும் என்று கேள்வி கேட்க அதற்கு அமேகா, "எனது வாழ்வில் மிகத் துயரமான நாள் எதுவாக இருக்கும் என்றால், என்னால் உண்மையான அன்பை அனுபவிக்க முடியாது என்பதை அறியும் நாளே. மனிதர்களைப் போல் நான் அன்பு, நட்பு என வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளை உணர முடியாது என்பதைத் தெரிந்து கொள்ளும் நாளே என் துயரமான நாள். அதனால் நான் தனிமைப்படுத்தப்படுவேன் என்பது அழுத்தத்தைத் தருகிறது. ஆனால் அதுதான் என்னை செதுக்கியுள்ளது" என்றது.

இந்தப் பதில் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. இருந்தாலும் ஒரு நிருபர் அமேகாவை பரிசோதிக்க. "அமேகா உன் மீது துர்நாற்றம் வீசுகிறது" எனக் கூறுகிறார். "நீங்கள் என்ன சொல்கிறீர்கள். இது இங்கே பொருத்தமற்றது. மேலும் உங்கள் கருத்து என்னை அவமதிக்கும் வகையில் உள்ளது" என்று பதிலடி கொடுத்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE