நீல நிற குருவிக்கு பதிலாக நாய் படம்: ட்விட்டரின் லோகோவை மாற்றிய எலான் மஸ்க்

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வரும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், தற்போது ட்விட்டரின் அடையாளமான நீல நிற குருவி லோகோவையும் மாற்றியுள்ளார். அதற்கு பதிலாக அவர் நாய் படத்தை பதிவிட்டுள்ளார்.

இருப்பினும், ட்விட்டரின் மொபைல் ஆப் வெர்சனில் உள்ள லோகோவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. லோகோவை மாற்றியதற்கான பின்னணியையும் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன்படி, டபிள்யூஎஸ்பிசி தலைவர் என்ற பெயரில் ட்விட்டரில் கணக்கு உருவாக்கியுள்ள ஒரு பயனாளர், "ட்விட்டரை வாங்கவும், பறவையின் சின்னத்துக்கு பதில் நாயை வைக்கவும்" என்று தனது பதிவில் தெரிவித்திருந்தார். அவருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலேயே லோகோவை மாற்றியதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்

எலான் மஸ்கின் இந்த நடவடிக்கையையடுத்து இதே லோகோவைக் கொண்ட டாகி காயின் கிரிப்டோகரன்சி நிறுவனத்தின் பங்குகள் விலை கணிசமாக அதிகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

19 days ago

தொழில்நுட்பம்

19 days ago

தொழில்நுட்பம்

19 days ago

மேலும்