சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப் மெசேஞ்சர் தளத்தில் சாட்களை லாக் செய்யும் ‘லாக் சாட்’ அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் ‘லாக் சாட்’ என்ற அம்சம் இந்த தளத்தில் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை வாட்ஸ்அப் குறித்த மேம்பாடுகளை பின்தொடர்ந்து வரும் Wabetainfo தெரிவித்துள்ளது.
» சென்னையில் சாலைப்பணிகள் - நள்ளிரவில் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் இறையன்பு
» நடிகர் சூர்யா துவக்கிவைத்த இயக்குநர் ஹரியின் புதிய ஸ்டூடியோ
இதன் மூலம் பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் செயலியில் சாட்களை லாக் செய்யலாம் என தெரிகிறது. அதே நேரத்தில் பயனரின் தனிப்பட்ட பிரைவசி என்பது இந்த அம்சத்தின் மூலம் நூறு சதவீதம் உறுதி செய்யப்படுகிறது. உதாரணமாக வாட்ஸ்அப் பயன்படுத்தி வரும் பயனரின் போனை இரவலாக பெரும் நபர்கள் அந்த போனின் பயனருக்கு தெரியாமல் அவரது வாட்ஸ்அப் சாட்களை பார்க்கக்கூடும். இந்த சூழலில் குறிப்பிட்ட பிரைவசி சார்ந்த சாட்களை லாக் செய்யும் இந்த அம்சம் அதுமாதிரியான சங்கடங்களில் இருந்து பயனர்களுக்கு விமோச்சனம் தரும் என தெரிகிறது.
பயனர்களின் பிரைவசியை உறுதி செய்ய இந்த அம்சம் பெரிதும் உதவும் என தெரிகிறது. மேலும், லாக் செய்யப்பட்ட சாட்களுக்கு அனுப்பிய அல்லது பெற்ற ஆடியோ, வீடியோ, படங்கள் மற்றும் கோப்புகள் போன்ற எந்தவொரு மீடியாவையும் பயனரை தவிர வேறு யாரும் பார்க்க முடியாது எனவும் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
17 days ago