ஒப்போ முதல் மோட்டோ வரை: MWC-ல் கலக்கிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள்

By எல்லுச்சாமி கார்த்திக்

பார்சிலோனா: நடப்பு ஆண்டுக்கான ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற பார்சிலோனா மொபைல் வேர்ல்ட் மாநாட்டில் ஒப்போ, டெக்னோ, ஹானர், மோட்டோரோலா போன்ற முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மடிக்கக்கூடிய வகையிலான ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை டெமோ காட்டி உள்ளன. இது இந்த நிகழ்வின் ஹைலைட்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

இன்றைய ஸ்மார்ட் டிஜிட்டல் யுகத்தில் வசித்து வரும் மக்களுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது ஸ்மார்ட்போன்கள். அது பள்ளி செல்லும் குழந்தைகள் தொடங்கி அனைத்து வயதினருக்கும் பொருந்தும். செல்போனை வடிவமைத்த மார்ட்டின் கூப்பர் கூட பின்னாளில் அதன் பரிணாம வளர்ச்சியானது இப்படி எல்லாம் இருக்கும் என கணித்திருக்கமாட்டார். அந்த அளவிற்கு மாற்றம் கண்டுள்ளது செல்போன்.

‘ஹலோ’ சொல்வதில் தொடங்கி குறுஞ்செய்தி அனுப்ப, வீடியோ வடிவிலான உரையாடல் மேற்கொள்ள, பணம் அனுப்ப மற்றும் பெற, ஆன்லைன் டிக்கெட் புக் செய்ய, படம் பார்க்க, புத்தகம் வாசிக்க என மாயமானை போல ஸ்மார்ட்போன்களின் ஓட்டம் நீண்டு கொண்டே போகிறது. அதிலும் 5ஜி வரவால் இணைய இணைப்பின் வேகம் படு ஸ்பீடாக இருக்கிறது. இந்த சூழலில் ஸ்மார்ட்போனின் மற்றொரு அவதாரமாக ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் சந்தையை கலக்க உள்ளன. ஏற்கனவே சில முன்னணி நிறுவனங்கள் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் ஃபோல்டபிள் போன்களை அறிமுகம் செய்துள்ளன. இந்தச் சூழலில் அது குறித்து பார்ப்போம்.

ஒப்போ Find N2 Flip: ஒப்போ நிறுவனம் Find N2 ப்ளிப் ஃபோல்டபிள் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் சாம்சங் கேலக்ஸி ப்ளிப் மாடலை நினைவு செய்கிறது. 3.26 இன்ச் டிஸ்பிளேவை ஓபன் செய்தால் 6.8 இன்ச் ஆக அது விரிவாகிறது. ஒன்பிளஸ் நிறுவனமும் ஒப்போ பாணியில் ப்ளிப் போன்களை அறிமுகம் செய்யும் என தெரிகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூவாய் பி50 பாக்கெட்: சீன தேச சந்தையில் ஹூவாய் பி50 போன் மிகவும் பிரபலம். இந்த போனின் புதிய பதிப்பாக ஃபோல்டபிள் வடிவில் புதிய பி50 பாக்கெட் போன் வெளிவந்துள்ளது. இதன் வெளிப்புற ஸ்க்ரீன் 1 இன்ச் மட்டுமே உள்ளது. அதுவே அன்-ஃபோல்ட் செய்தால் 6.9 இன்ச் அளவுக்கு டிஸ்பிளே மாறுகிறது.

ஹானர் மேஜிக் விஎஸ்: ஹானரின் மேஜிக் விஎஸ் ஃபோல்டபிள் போன் சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்ட்4 மாடல் போனை விடவும் மெல்லிய வடிவில் வெளிவந்துள்ளது. இந்த போனில் ஃபோல்டபிள் போன்களில் இருக்கும் கிரீஸ் (ஃபோல்ட்) சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாம்.

டெக்னோ ஃபேன்டம் ஃபோல்ட்: டெக்னோ நிறுவனம் முதல் முறையாக ஃபோல்டபிள் போனை அறிமுகம் செய்துள்ளது. இது பார்க்க சாம்சங் ஃபோல்ட் சீரிஸ் போல உள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டின் பிற்பாதியில் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இதன் விலை சுமார் 89,999 ரூபாய் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோரோலா Rizr: ரோலபிள் டிஸ்பிளே தான் இந்த போனின் சிறப்பு. நொடிப் பொழுதில் 5 இன்ச் டிஸ்பிளேவில் இருந்து 6.5 இன்ச் பேனல் ஸ்கிரீனுக்கு இந்த போனில் மாறிவிடலாம். மோட்டோவின் Razr லைன் அப்பில் இந்த போன் வெளிவந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

19 days ago

மேலும்