உலகின் மலிவு விலை 5ஜி சந்தையாக இந்தியா திகழும்: பில் கேட்ஸ் புகழாரம்

By செய்திப்பிரிவு

டெல்லி: உலகின் மலிவு விலை 5ஜி சந்தையாக இந்திய நாடு திகழும் என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஜி20 தொடர்பான நிகழ்வு ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தற்போது அவர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் பில் கேட்ஸ். மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். 67 வயதான அவர் கடந்த 1995 முதல் 2017 வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர். இதில் 2010 முதல் 2013 வரையில் அவர் முதலிடத்தை இழந்திருந்தார். அதன் காரணமாக உலகம் முழுவதும் அறியப்படுகின்ற செல்வாக்கு மிக்க நபராக அவர் திகழ்கிறார். இப்போது உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார்.

“சிறந்த டிஜிட்டல் நெட்வொர்க்கை இந்தியா கொண்டுள்ளது. இது அற்புதமான விஷயமாகும். இங்கு ஸ்மார்ட்போன் பயனர்களின் சதவீதம் அதிகம். இங்கு இணைய இணைப்பு அபாரமாக உள்ளது. அது மலிவான விலையிலும் கிடைக்கிறது. இதேதான் 5ஜி சேவையிலும் தொடரும் என கருதுகிறேன். உலகின் மலிவு விலை 5ஜி சந்தையாக இந்தியா திகழும் என்பதில் எனக்கு துளிக்கூட சந்தேகம் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 5ஜி: கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ டெலிகாம் நிறுவனங்கள் குறிப்பிட்ட நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளன. இதில் ஜியோ நிறுவனம் சுமார் 200 நகரங்களில் 5ஜி சேவையை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

19 days ago

மேலும்