புது டெல்லி: சீன தேச தொடர்பு கொண்ட 138 பெட்டிங் செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை அவசர முடிவாக அரசு எடுத்துள்ளதாக தகவல். இதனை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 முதல் இந்திய தேச பாதுகாப்பு கருதி சீன தேச மொபைல் செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்து வருகிறது. டிக்-டாக் துவங்கி பல்வேறு செயலிகளுக்கு அப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல சீன தேசத்துடன் தொடர்பு கொண்ட மற்ற நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில்தான் தற்போது மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனை உள்துறை அமைச்சகம் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்டுள்ள முடிவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சுமார் 138 ‘Betting’ செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யவும், அதனை முடக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கடன் செயலிகள் மூலம் கடன் பெற்ற இந்திய மக்கள் பலரும் பல்வேறு விதமான பாதிப்புகளை எதிர்கொண்டு வந்தனர். அதனை தடுக்க நடவடிக்கை வேண்டும் என சொல்லி வந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த செயலிகள் அனைத்தும் சீன தேசத்தை சேர்ந்தவர்கள் மூளையாக இருந்து செயல்பட்டு வந்தது தெரிந்துள்ளது. அவர்கள் இதற்காக இந்தியர்களை நியமித்து இதனை இயக்கி உள்ளதாகவும் தகவல்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
16 hours ago
தொழில்நுட்பம்
16 hours ago
தொழில்நுட்பம்
19 hours ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
18 days ago