BUYING GUIDE | இந்திய சந்தையில் ரூ.12,000-க்கு குறைந்த பட்ஜெட்டில் கிட்டும் சிறந்த ஸமார்ட்போன்கள்

By எல்லுச்சாமி கார்த்திக்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போது ரூ.12,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம். இப்போது அனைவரும் யுபிஐ மூலமாக அன்றாட வரவு செலவு சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தச் சூழலில் ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் ஆக விரும்பும் மொபைல்போன் பயனர்கள் மற்றும் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை எதிர்பார்க்கும் பயனர்களுக்கும் இது உதவும்.

இந்த ஸ்மார்ட்டான டிஜிட்டல் யுகத்தில் வசித்து வரும் மக்களுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது ஸ்மார்ட்போன்கள். அது பள்ளி செல்லும் குழந்தைகள் தொடங்கி அனைத்து வயதினருக்கும் பொருந்தும். செல்போனை வடிவமைத்த மார்ட்டின் கூப்பர் கூட பின்னாளில் அதன் பரிணாம வளர்ச்சியானது இப்படி எல்லாம் இருக்கும் என கணித்திருக்கமாட்டார். அந்த அளவிற்கு மாறியுள்ளது செல்போன்.

‘ஹலோ’ சொல்வதில் தொடங்கி குறுஞ்செய்தி அனுப்ப, வீடியோ வடிவிலான உரையாடல் மேற்கொள்ள, பணம் அனுப்ப மற்றும் பெற, ஆன்லைன் டிக்கெட் புக் செய்ய, படம் பார்க்க, புத்தகம் வாசிக்க என மாயமானை போல ஸ்மார்ட்போன்களின் ஓட்டம் நீண்டு கொண்டே போகிறது.இந்தச் சூழலில் புத்தாண்டு பிறந்த கையோடு புதிய போன் வாங்க விரும்புபவர்களுக்கான வழிகாட்டுதல்.

ரியல்மி சி35: இந்தியாவில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் மற்றொரு போன்தான் ரியல்மி சி35. 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மாடல் கொண்ட போனின் விலை ரூ.11,999. யுனிசாக் டி616 ப்ராசஸர், 50 மெகா பிக்சல் கொண்ட பிரதான கேமரா, 5,000mAh திறன் கொண்ட பேட்டரி, 18 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் புள் ஹெச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. சிறந்த கேமரா கொண்ட போன்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த போன் சரியான சாய்ஸாக இருக்கும்.

ரெட்மி 10: கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சந்தையில் அறிமுகமான போன்தான் ரெட்மி 10. 4ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த போன் கிடைக்கிறது. இதன் விலை முறையே ரூ.9,999 மற்றும் ரூ.11,999. குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 6000mAh திறன் கொண்ட பேட்டரி, 6.71 இன்ச் டிஸ்பிளே, 18 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்டும் கொண்டுள்ளது. நீடித்த பேட்டரி மற்றும் தரமான பர்ஃபாமென்ஸை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இந்த போன் உதவும்.


லாவா பிளேஸ் 5ஜி: நாட்டிலேயே மலிவு விலையில் கிடைக்கும் 5ஜி போன்களில் லாவா பிளேஸ் 5ஜி போனும் ஒன்றாக உள்ளது. 6.5 இன்ச் திரை அளவு, ஹெச்.டி+ டிஸ்பிளே, மீடியாடெக் டிமான்சிட்டி 700 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 50 மெகாபிக்சல் கொண்டுள்ள பிரதான கேமரா, 5000mAh பேட்டரியும் இந்த போனில் இடம் பெற்றுள்ளது. இந்த போனின் விலை ரூ.12 ஆயிரத்திற்குள் உள்ளது.

சாம்சங் கேலக்சி F13: தென்கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி F13 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.11,999. சாம்சங் எக்ஸினோஸ் 850 புரோசஸர் இதில் இடம்பெற்றுள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த போன். 6000mAh திறன் கொண்ட பேட்டரி, 15 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 50 மெகாபிக்சல் கொண்ட பிரதான கேமரா போன்றவை இதில் உள்ளது.

போக்கோ எம்5: 6.58 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட், 50 மெகாபிக்சல் கொண்ட பிரதான கேமரா, 5000mAh பேட்டரி, 18 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் வசதி, 4ஜி இணைப்பு வசதி இடம் பெற்றுள்ளது. 5ஜி வெர்ஷன் பின்னர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனை ரூ.12 ஆயிரத்திற்கும் குறைவாக ப்ளிப்கார்ட் தளத்தில் பெறலாம். மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

18 days ago

தொழில்நுட்பம்

21 days ago

தொழில்நுட்பம்

21 days ago

தொழில்நுட்பம்

23 days ago

தொழில்நுட்பம்

25 days ago

தொழில்நுட்பம்

25 days ago

தொழில்நுட்பம்

26 days ago

தொழில்நுட்பம்

27 days ago

மேலும்