தளம் புதிது: புதுமையான தகவல் தளம்

By சைபர் சிம்மன்

உங்களுக்கு வயதாகிக்கொண்டிருக்கிறது என்பதை நினைவுபடுத்துவது எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இதை மிகவும் சுவாரஸ்யமான வகையில் செய்கிறது ‘யூஆர்கெட்டிங்ஓல்ட்’ இணையதளம்.

இந்தத் தளத்தில் பயனாளிகள் தங்கள் பிறந்த தேதி விவரத்தைச் சமர்பித்தால், அவருக்கு எத்தனை வயதாகிறது எனும் விவரத்தை இந்தத் தளம் அளிக்கிறது. ‘இது என்ன பெரிய விஷயமா. வயது விவரம் தெரியாதா?’ என்று கேட்கலாம். விஷயம் என்னவென்றால், பயனாளியின் வயதை வருடங்கள், மாதங்கள், நாட்கள் எனத் துல்லியமாகத் தெரிவிப்பதோடு, தொடர்புடைய வேறு பல புள்ளிவிரங்களையும் முன்வைத்து வியக்க வைக்கிறது.

பிரபலங்கள் சிலரின் வயதுடன் ஒப்பிடப்படுவதோடு, பயனாளியின் இதயத் துடிப்புகளின் எண்ணிக்கை, மூச்சுக் காற்றின் எண்ணிக்கை, அவர் பிறந்த போது பூமியில் உயிருடன் இருந்தவர்களின் எண்ணிக்கை என வரிசையாகத் தகவல்கள் இடம்பெறுகின்றன. கடந்த காலங்களில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளும் பட்டியலிடப்படுகின்றன. உங்கள் சிறு வயதில் நடந்தவை, இளமைக் காலத்தில் நடந்தவை என இந்த நிகழ்வுகளைப் பார்க்கலாம். உங்களை முன்வைத்துப் பயனுள்ள தகவல்களைத் தெரிந்துகொள்ள சுவாரசியமான வழியாக இந்தத் தளம் அமைகிறது.

இணையதள முகவரி: >http://you.regettingold.com/

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

20 days ago

தொழில்நுட்பம்

21 days ago

தொழில்நுட்பம்

22 days ago

தொழில்நுட்பம்

23 days ago

தொழில்நுட்பம்

24 days ago

மேலும்