இது எந்த பக்கமும் சாயாத பைக் | யமஹாவின் செல்ஃப் பேலன்ஸிங் தொழில்நுட்ப முயற்சி

By செய்திப்பிரிவு

சென்னை: நடை பழகும் சிறு குழந்தைகள் பயன்படுத்தும் நடைவண்டியை போல செல்ஃப் பேலன்ஸிங் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு எந்த பக்கமும் சாயாத பைக்கை வடிவமைத்து, சோதனை ஓட்டமும் பார்த்துள்ளது யமஹா நிறுவனம். அதன் ஹைலைட்ஸ் குறித்து பார்ப்போம்.

அட்வான்ஸ்டு மோட்டார்சைக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட் சிஸ்டம் என இதனை சொல்கிறது யமஹா. இந்த தொழில்நுட்பத்தை ஆர்3 சூப்பர் ஸ்போர்ட் பைக்கில் சோதித்துப் பார்த்துள்ளது. இதற்காக பைக்கில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை என்றாலும் இந்த தொழில்நுட்பத்திற்காக வேண்டி இரண்டு மின் மோட்டார்களை முன்பக்க சஸ்பென்ஷனுக்கு கீழ் இருப்பதை பார்க்க முடிகிறது.

அக்யூரேட்டர்கள் மூலம் முன்பக்க சக்கரம் மற்றும் ஹேண்டில்பார் இணைக்கப்பட்டுள்ளதாம். இது வாகனத்தின் முன், பின் மற்றும் வலது, இடது குறித்த திசை மாற்றங்களை ஸ்டெபிளைஸ் செய்ய இன்புட் தகவல்களை அனுப்பும் என தெரிகிறது. இப்போதைக்கு இந்த தொழில்நுட்பம் மணிக்கு 5 கிலோ மீட்டர் மற்றும் அதற்கும் குறைவான வேகத்தில் செல்லும் போது மட்டுமே இயங்கும் என தெரிகிறது. ஏனெனில் இந்த சிஸ்டம் ஆராய்ச்சி அளவில் இருப்பதாக யமாஹா தெரிவித்துள்ளது. ஆனாலும் இதை பயன்பாட்டுக்கு கொண்டு வரும்போது பெரிய மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்காது எனவும் தெரிவித்துள்ளது.

சிறந்த கன்ட்ரோல் மற்றும் பைக் ஓட்டுனர்களின் மன அமைதிக்காகவும் இதை மேற்கொண்டுள்ளதாக யமஹா தெரிவித்துள்ளது. மேலும், இது புதிதாக பைக் ஓட்டி பழகுபவர்களுக்கு பெரிதும் உதவும் என தெரிவித்துள்ளது. விபத்தில் இருந்து தப்பிக்கவும் இந்த தொழில்நுட்பம் உதவும் என தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE