மணிக்கு 160 கி.மீ வேகம்: பறக்கும் காரை சோதனை செய்த இஸ்ரேலிய ஸ்டார்ட்-அப் நிறுவனம்

By செய்திப்பிரிவு

ஜெருசேலம்: மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் மின்சார காரின் சோதனை ஓட்டத்தை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஏர் (AIR) வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அந்த நிறுவனம் தயாரித்து வரும் ஏர் ஒன் மாடல் காரின் மாதிரி வடிவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த பகுதிகளில் அல்லது தெருக்களில் ஆகாய மார்க்கமாக குறுகிய தூரம் பறக்கும் நோக்கில் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது அந்நிறுவனம். இந்தச் சூழலில் அதன் சோதனை ஓட்டம் வெற்றி கண்டுள்ளது தங்கள் நிறுவனத்தின் முயற்சியில் முக்கிய மைல்கல் என தெரிவித்துள்ளது.

இந்த ஏர் ஒன் மாதிரி காரில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க முடியுமாம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது சந்தைக்கு வரும் என நம்புவதாக அதன் வடிவமைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 மைல் தூரம் வரை பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கிலோ மீட்டர் என தகவல். இதன் விலை சுமார் 1.5 லட்சம் டாலர்கள் இருக்கும் என தெரிகிறது. இருந்தாலும் இதற்கான உரிய அனுமதியை பெற வேண்டியது அவசியம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

17 days ago

மேலும்