25 ஆண்டு கால கூகுள் வரலாற்றில் ‘கத்தார் இறுதிப் போட்டி’ தேடல்தான் டாப்: சுந்தர் பிச்சை

By செய்திப்பிரிவு

கலிபோர்னியா: கடந்த 25 ஆண்டுகால கூகுள் தேடலில் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை 2022 தொடரின் இறுதிப் போட்டி குறித்த தேடல்தான் டாப் என தெரிவித்துள்ளார் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை.

கத்தார் நாட்டின் லுசைல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா. அந்த அணிக்கு ஒட்டுமொத்த உலகமும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன.

இந்தச் சூழலில் கூகுள் தேடலில் இந்தப் போட்டி குறித்த தேடல்தான் டாப் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இன்றைய டிஜிட்டல் உலக பயனர்கள் தங்களுக்கு தேவையானவற்றை கூகுள் வழியே தேடி தெரிந்துக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிதான் ஒட்டுமொத்த உலகமும் கூகுளில் தேடிய ஒரே விஷயமாக இருந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கூகுள் தேடலில் அதிகமான டிராஃபிக்கை இந்தப் போட்டி பதிவு செய்துள்ளது” என அவர் ட்வீட் செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE