50 கோடி வாட்ஸ்அப் பயனர்களின் தரவுகள் கசிந்ததாக தகவல்: இந்தியா உட்பட 80 நாடுகள் பாதிப்பு

By செய்திப்பிரிவு

சுமார் 50 கோடி வாட்ஸ்அப் பயனர்களின் தரவுகள் இணையவெளியில் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தரவுகளை ஆன்லைனில் ஹேக்கர்கள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் தகவல். இதனை சைபர் குற்றம் குறித்த செய்திகளை வெளியிட்டு வரும் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதனால் வாட்ஸ்அப் மீண்டும் அதன் பயனர் தரவு பாதுகாப்பு சிக்கலுக்கு ஆளாகியுள்ளது. இந்தியா உட்பட சுமார் 80 நாடுகளை சேர்ந்த பயனர்கள் இந்த முறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகள் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாற்றிக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அந்த தளத்தின் பயனர் தரவுகள் கசிந்துள்ளன.

இந்த கசிவு குறித்து வாட்ஸ்அப் தரப்பில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால், இந்த அறிக்கையை பல்வேறு டேட்டா மாதிரிகளை ஆய்வு செய்த பிறகே இதனை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. இருந்தாலும் இதற்கு வாட்ஸ்அப் தளம் காரணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்க்ரப்பிங் எனும் முறையில் பல்வேறு வலைதளங்களில் இருந்து போன் நம்பர்களை சேகரித்து அதன் மூலம் வாட்ஸ்அப் பயனர்களின் தரவுகளை ஹேக்கர்கள் கசிய செய்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

16 days ago

மேலும்