VLC மீடியா பிளேயர் மீதான தடை நீக்கம்: இந்தியாவில் இப்போது டவுன்லோட் செய்யலாம்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் வாக்கில் வீடியோ லேன் நிறுவனம் டெவெலப் செய்த VLC மீடியா பிளேயருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அந்த தளத்தின் மீதான தடையை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இந்த தளத்தை பயன்படுத்தி மீடியா பிளேயரை டவுன்லோட் செய்யலாம்.

இன்டர்நெட் ஃபிரீடம் பவுண்டேஷன் வீடியோ லேனுக்கு இந்த சட்டப் போராட்டத்தில் உதவியுள்ளது. அதன் மூலம் http://www.videolan.org/ எனும் இந்த தளம் வழக்கமான செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

எந்தவித காரணமும், முன் அறிவிப்பும் இல்லாமல் VLC மீடியா பிளேயர் தடை செய்யப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு வீடியோ லேன் சார்பில் சட்டபூர்வமான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முக்கியமாக, இந்திய அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள எங்கள் உரிமைகளைப் பாதுகாக்க தவறியதற்காக, சர்வதேச சட்டத்தின் கீழ் உங்கள் கடமைகளை மீறியதற்காக மற்றும் சொந்த விதிகளை மீறியதற்காக உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு உரிமை இருப்பதாக இந்திய அரசிடம் வீடியோ லேன் தெரிவித்ததாக தகவல்.

அதன் பிறகுதான் அந்நிறுவனத்தின் தளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கு முன்னர் இந்த தளத்தை அக்செஸ் செய்ய முடியாமல் 404 எனும் எர்ரர் வந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 73 மில்லியன் டவுன்லோடுகளை இது கடந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

16 days ago

மேலும்