புதுடெல்லி: ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் ரூ.3.75 லட்சம் கோடிக்கு கையகப்படுத்தியுள்ளார். வாங்கிய கையுடன் அவர் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக கணிசமான பணியாளர்களை அடுத்தடுத்து பணி நீக்கம் செய்து வருகிறார்.
இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத் தின் இந்திய பிரிவு வட்டாரங்கள் கூறியதாவது:
இந்தியாவில் 200 பேர் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த வாரம் 180-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 10-க்கும் மேற்பட்ட சிலரே இன்னும் பணியில் தொடர்ந்து வருகின்றனர். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 70% வரை தயாரிப்பு மற்றும் பொறியியல் குழுவில் வேலை செய்து வந்தவர்கள்.
இவை தவிர, சந்தைப் படுத்துதல், பொதுக் கொள்கை, பெருநிறுவன தொடர்பு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளை சேர்ந்த பணியாளர்களும் ட்விட்டர் நடவடிக்கையால் வேலை இழப்புக்கு ஆளாகி உள்ளனர்.
» டெபிட் கார்டு இல்லாமல் யுபிஐ மூலம் ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம்: படிப்படியான வழிகாட்டி
» மழைக் காலத்தில் ஸ்மார்ட்போன், டிஜிட்டல் கேட்ஜெட்களை பாதுகாப்பதற்கான ஸ்மார்ட் டிப்ஸ்
சர்வதேச அளவில் அந்நிறுவனத்தில் 7,500 பேர் பணியாற்றி வந்த நிலையில், சுமார் 3,700 பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 hour ago
தொழில்நுட்பம்
2 hours ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
8 days ago