சங்நம்: மீண்டும் இந்தியாவில் Battlegrounds Mobile India கேம் கம்பேக் கொடுக்கும் எனத் தெரிகிறது. இதனை கிராஃப்டன் வீடியோ கேம் நிறுவனம் பிஜிஎம்ஐ இந்திய தளத்தில் புதிய வீடியோக்களை வெளியிட்டு சூசகமாக தெரிவித்துள்ளது. சுமார் நான்கு வீடியோக்கள் புதிதாக அந்த தளத்தில் அப்லோட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கடந்த செப்டம்பர் வாக்கில் தென் கொரிய நிறுவனமான கிராஃப்டன் பிளேயர் சப்போர்ட் என்ற யூடியூப் சேனலையும் அந்த நிறுவனம் உருவாக்கி உள்ளது. தற்போது அதில் வீடியோக்களை அப்லோட் செய்துள்ளது. இருந்தாலும் இதனை பொது வெளியில் அனைவரும் பார்க்கும் வகையில் அப்லோட் செய்யப்படவில்லை. பிஜிஎம்ஐ இந்திய தளத்தில் புதிய வீடியோக்களை சப்போர்ட் செக்ஷனில் பார்க்கலாம். இதுவரை இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் இந்த கேம் கம்பேக் கொடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது
கடந்த 2020 வாக்கில் இந்தியாவில் பப்ஜி உட்பட பல்வேறு சீன செயலிகள் முடக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து 2021 வாக்கில் இந்திய பப்ஜி என சொல்லப்படும் Battlegrounds Mobile India கேம் அறிமுகம் செய்யப்பட்டது. இருந்தும் கடந்த ஜூலை வாக்கில் இந்திய பயனர்கள் இந்த கேமை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் அக்சஸ் முடங்கியது. பப்ஜி முடக்கப்பட்ட அதே தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவின் கீழ் இந்த கேமை இந்திய அரசு முடக்கியது.
இந்தச் சூழலில் புதிய பெயரில் இந்த கேம் மறு உருவம் பெற்று கம்பேக் கொடுக்க உள்ளது. புதிய இந்திய பப்ளிஷர் இந்த கேமை இந்தியாவில் அறிமுகம் செய்வார் என தெரிகிறது. சுமார் 100 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்களை கடந்த ஜூலை வாக்கில் பிஜிஎம்ஐ கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 hour ago
தொழில்நுட்பம்
10 hours ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
21 days ago
தொழில்நுட்பம்
23 days ago
தொழில்நுட்பம்
23 days ago