கூகுள் பிளே பாயிண்ட்ஸ் இந்தியாவில் அறிமுகம் | டவுன்லோட் செய்தால் புள்ளிகள் பெறலாம்: பயன்படுத்துவது எப்படி?

By எல்லுச்சாமி கார்த்திக்

கூகுள் பிளே ஆப் ஸ்டோரில் பயனர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க செய்யும் நோக்கில் கூகுள் பிளே பாயிண்ட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இது இந்தியாவில் உள்ள பயனார்களுக்காகவும் அறிமுகமாகி உள்ளது. வரும் வாரங்களில் இந்தியாவில் உள்ள பயனர்கள் தங்கள் பயன்பாட்டுக்கு இதை பெறுவார்கள் என தெரிகிறது. இதனை பயனர்கள் பயன்படுத்துவது எப்படி? இதன் மூலம் கிடைக்கும் பலன்கள் என்ன? என்பதை விரிவாக பார்ப்போம்.

இன்றைய டிஜிட்டல் உலகின் சாம்ராட்டாக இயங்கி வருகிறது கூகுள். டிஜிட்டல் பயனர்களின் பெரும்பாலான தேவைகளுக்கு கூகுள் உதவி வருகிறது. கூகுள் பிளே ஸ்டோர், யூட்யூப், ஜிமெயில், கூகுள் மேப்ஸ், கூகுள் பே என அதன் செயல்பாடுகள் வெவ்வேறு வடிவங்களில் நீண்டு கொண்டே போகிறது. அதில் பயனர்களுக்கு சில பிரத்யேக சலுகையை வழங்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டது தான் கூகுள் பிளே பாயிண்ட்ஸ்.

கூகுள் பிளே பாயிண்ட்ஸ்: இது உலக அளவில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் பயனர்களுக்காக கூகுள் செயல்படுத்தி உள்ள திட்டமாகும். இதன் மூலம் கூகுள் பிளே ஸ்டோர் பயனர்களுக்கு அவர்கள் டவுன்லோட் செய்யும் ஒவ்வொரு அப்ளிகேஷனுக்கும் புள்ளிகளை வழங்குகிறது கூகுள். இதனை பயனர்கள் பின்னர் ரெடீம் செய்து கொள்ளலாம். கூகுள் பிளே கிரெடிட்டில் இதனை ரெடீம் செய்யலாம். அதன் மூலம் பயனர்கள் மேக் இன்-ஆப் பர்சேஸ் அல்லது ஏதேனும் ஒரு சேவையை சப்ஸ்கிரைப் செய்யலாம்.

இதற்காக அப்ளிகேஷன் டெவலப்பர்கள் மற்றும் பிரபல கேம்ஸ் நிறுவனங்களுடன் கூகுள் இணைந்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 28 நாடுகளில் இது செயல்பாட்டில் உள்ளது. வரும் வாரங்களில் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த திட்டம் மொத்தம் நான்கு வகைகளாக கிடைக்கிறது. Bronze, சில்வர், கோல்ட் மற்றும் பிளாட்டினம் என அது உள்ளது. ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பயன்கள்.

உலக அளவில் பிரசித்தி பெற்ற மினிகிளிப், டிஜி ஐஎன்சி, லூடோ கிங், லூடோ ஸ்டார், பிளேசிம்பிள் கேம்ஸ், ட்ரூ காலர் போன்றவற்றுடன் கூகுள் இதற்காக இணைந்துள்ளது.

பிளே பாயிண்ட்ஸில் இணைவது எப்படி?

இதனை முற்றிலும் இலவசமாக வழங்கி வருவதாக கூகுள் தெரிவித்துள்ளது. பயனர்கள் இதில் இணைய பிளே ஸ்டோர் அப்ளிகேஷனை தங்களது ஆண்ட்ராய்டு போன்களில் ஓபன் செய்ய வேண்டும். பின்னர், பயனர்கள் தங்களது ஃப்ரொபைல் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் பிளே பாயிண்ட்ஸை தேர்வு செய்ய வேண்டும். இதில் பயனர்களுக்கு முதல் வார பயன்பாட்டின் போது கூடுதல் புள்ளிகளை பெற முடியும் என தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

தொழில்நுட்பம்

19 hours ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

18 days ago

மேலும்