ஆப்பிள் ஈவென்ட் 2022 ஹைலைட்ஸ் | ஐபோன் 14 சீரிஸ் போன்கள், ஆப்பிள் வாட்ச், A16 பயோனிக் சிப் அறிமுகம்
கலிபோர்னியாவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் ஆப்பிள் நிறுவனம் நடத்திய ஆப்பிள் ஈவென்டில் ஐபோன் 14 சீரிஸ் வரிசையில் நான்கு போன்களும், இரண்டு ஆப்பிள் வாட்ச்கள், நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஏர்பாட் புரோ உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதோடு A16 பயோனிக் சிப் போன்றவற்றையும் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது.
உலகமே இந்த நிகழ்வை உற்று நோக்கி இருந்தன. சமூக வலைதளங்களில் இதுகுறித்த டாக் வைரலாக இருந்தன. சுமார் 2 மணி நேரம் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வு குறித்த அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது முதலே ஐபோன் 14 சீரிஸ் குறித்த அறிவிப்பு இதில் இடம் பெற்றிருக்கும் என சொல்லப்பட்டது. இப்போது அது நிஜமாகி உள்ளது.
இந்த நிகழ்வின் ஹைலைட்ஸ் சில…
- ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8: கடந்த 7 ஆண்டுகளாக சந்தையில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்வாட்ச்களில் ஆப்பிள் வாட்ச் முதலிடம் வகிக்கிறது. அந்த வகையில் தற்போது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மகளிரின் மாதாந்திர மாதவிடாய் சுழற்சி குறித்த தகவலை சேமிப்பது போன்ற அம்சங்களை கொண்டுள்ளது இந்த வாட்ச். மேம்படுத்தப்பட்ட பேட்டரி இதில் இடம் பெற்றுள்ளது. ஜிபிஎஸ் மற்றும் செல்லுலார் வேரியண்ட் இதில் உள்ளது.
- ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா: விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரியர்களை டார்கெட் செய்து இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 36 மணி நேர பேட்டரி லைஃப் கொண்டுள்ளது இந்த வாட்ச். குறிப்பாக நீச்சல் விளையாட்டுக்கு உகந்த வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாம்.
- புதிய ஏர்பாட் துணையோடு ஒரு முறை இதனை சார்ஜ் செய்தால் தொடர்ச்சியாக 6 மணி நேரம் வரை இசையை கேட்டு மகிழலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஐபோன் 14 & 14 பிளஸ்: ஐந்து வண்ணங்களில் இந்த இரண்டு போன்களும் கிடைக்கும். A15 பயோனிக் சிப்பில் இயங்குகிறது. 12 மெகாபிக்சல் திறன் கொண்ட கேமரா இதில் இடம்பெற்றுள்ளது. 5ஜி சப்போர்ட்டில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 14 சீரிஸ் ஐபோன்களில் இ-சிம் மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இது அமெரிக்காவில் மட்டும் இப்போதைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாம்.
- செயற்கைக்கோள் மூலம் எமர்ஜென்சி SOS: சாட்டிலைட் கனெக்டிவிட்டியை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் அவசர நேரங்களில் சாட்டிலைட் இணைப்பு மூலம் பயனர்கள் இணைந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வரும் நவம்பர் முதல் ஐபோன் 14 மற்றும் 14 பிளஸ் மாடல்கள் அமெரிக்கா மற்றும் கனடாவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஐபோன் 14 மாடலின் விலை ரூ. 63,639 மற்றும் 14 பிளஸ் மாடலின் விலை ரூ.71,604. இதற்கான முன்பதிவு செப்டம்பர் 9 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஐபோன் 14 புரோ & புரோ மேக்ஸ்: புதுவிதமான ஃப்ராண்ட் டிசைன், நாட்ச் டிஸ்பிளே போன்றவை இதை இடம் பெற்றுள்ளது. A16 பயோனிக் சிப்பை கொண்டுள்ளது இந்த போன். 48 மெகா பிக்சல் கொண்ட கேமராவும் இடம் பெற்றுள்ளது. புரோ போனின் திரை அளவு 6.1 இன்ச் மற்றும் புரோ மேக்ஸ் 6.7 இன்ச் கொண்ட டிஸ்பிளே இதில் உள்ளது.
- புரோ போன் ரூ.79,565 மற்றும் புரோ மேக்ஸ் போனின் விலை ரூ. 87,530 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன்கள் இந்திய மற்றும் சீனாவில் இந்த பொங்கல் உற்பத்தி செய்யப்பட உள்ளன.
- இந்தியாவில் இந்த போன்களின் விற்பனை பணி எப்போது தொடங்கும் என்பது குறித்த விவரம் ஏதும் ஆப்பிள் தெரிவிக்கவில்லை.