பட்ஜெட் விலையில் 3 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்த ரெட்மி: விலை & அம்சங்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: ஒரே நாளில் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து கவனம் ஈர்த்துள்ளது ரெட்மி நிறுவனம். பிரைம் 11 5ஜி, பிரைம் 11 4ஜி மற்றும் A1 ஆகிய மூன்று போன்கள் தான் அவை. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் ஒரே நாளில் மூன்று போன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ரெட்மி 11 பிரைம் 5ஜி: மீடியாடெக் டைமன்சிட்டி 700 5ஜி சிப்செட், இரண்டு விதமான ஸ்டோரேஜ் வேரியண்ட், டியூயல் 5ஜி சிம் கார்டு, 6.58 இன்ச் ஃபுள் ஹெச்.டி டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, பின் பக்கத்தில் இரண்டு கேமரா போன்றவை இதில் இடம்பெற்றுள்ளது. மூன்று வண்ணங்களில் கிடைக்கும் இந்த போனின் விலை ரூ.12,999 முதல் தொடங்குகிறது.

ரெட்மி 11 பிரைம் 4ஜி: மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட், பின்பக்கத்தில் மூன்று கேமரா, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் போன்றவை இதில் வேறுபட்டுள்ளது. டிஸ்பிளே, பேட்டரி போன்றவை 11 பிரைம் 5ஜி போனில் இருப்பதை போலவே உள்ளது.

ரெட்மி A1: இந்த போன் ரூ.6,499 முதல் விற்பனை செய்யப்பட உள்ளது. 6.52 இன்ச் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, பின் பக்கத்தில் இரண்டு கேமரா, மீடியாடெக் ஹீலியோ A22 சிப்செட், மைக்ரோ யூஎஸ்பி, 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதி போன்றவற்றை இந்த போன் கொண்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

18 days ago

தொழில்நுட்பம்

26 days ago

தொழில்நுட்பம்

30 days ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

மேலும்