காற்று மாசிலிருந்து பாதுகாப்பு: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு புதிய ஹெல்மெட் தயாரித்த ஸ்டார்அப் நிறுவனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தூய்மையான காற்றை சுவாசிக்க உதவி செய்யும் புதிய தலைக்கவசம் ஒன்றை டெல்லியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது.

‘ஷெல்லியோஸ் டெக்னோலேப்ஸ்’ என்ற அந்த புதிய நிறுவனம் தயாரித்துள்ள அந்த தலைக்கவசத்தில் 'புளூடூத்'துடன் இணைக்கப்பட்ட செயலி ஒன்று உள்ளது. இந்த செயலி, தலைக்கவசத்தை எப்போது சுத்தம் செய்ய வேண்டும் என்ற தகவலை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கிறது.

இந்த புதிய நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தொடக்க நிதியை பெற்று, நொய்டாவில் உள்ள அறிவியல் மற்றும் தொழில் முனைவோர் தொழில்நுட்பப் பூங்காவில் தொடங்கப்பட்டுள்ளது.

தலைக்கவசம் தயாரிப்பதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுடன், வணிக அடிப்படையிலான ஒப்பந்தங்களில், இந்த புதிய தொழில் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. குளிர்காலங்களில் புதுடெல்லியில் ஏற்படும் காற்று மாசுவினால், இருசக்கர வாகன ஓட்டிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உணர்ந்து, இந்த தலைக்கவசங்களை ஷெல்லியோஸ் டெக்னோலேப்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

19 hours ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

24 days ago

மேலும்