‘வேற்றுமையில் ஒற்றுமை’: சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது

By செய்திப்பிரிவு

இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டு காலம் நிறைவு பெற்றுள்ளது. இந்த கொண்டாட்ட நிகழ்வை கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த டூடுல் இந்திய நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை கலாச்சாரத்தை தாங்கிப்பிடிக்கும் வகையில் அமைந்துள்ளது.

டெக்னாலஜி உலகின் சாம்ராட்களில் ஒன்று கூகுள். இந்நிறுவனத்தின் பல்வேறு சேவைகளை உலக மக்கள் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். அதில் மிகவும் முக்கியமானது கூகுள் மற்றும் கூகுள் குரோம் வெப் பிரவுசர்கள். அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் இந்த பிரவுசர்களில் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் இப்போது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் டூடுல் ஒன்றை வெளியிட்டு சிறப்பித்துள்ளது. இந்த டூடுலில் மூன்று பெண்கள் இடம் பிடித்துள்ளனர். இரண்டு ஆண்கள் பட்டம் விடுகின்றனர். அந்த மூன்று பெண்களில் ஒருவர் பட்டத்தை தாங்கி பிடித்துள்ளார்.

அதே போல் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்கும் என்பது தொடர்பாக குழந்தைகளுக்கு சிறப்பு டூடுல் போட்டி ஒன்றையும் கூகுள் அறிவித்துள்ளது. கேரளாவை சேர்ந்த ஓவியரான நீதி இதனை வரைந்துள்ளார். சுதந்திர போராட்டத்தின் போது காற்றடிகளில் ஆங்கிலேயருக்கு எதிரான முழக்கங்களை எழுதி, அதனை காற்றில் பறக்க விட்டுள்ளனர் என ஓவியர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE