Battlegrounds Mobile India கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கம்: தடை காரணமா?

By செய்திப்பிரிவு

கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களிலிருந்து Battlegrounds Mobile India கேம் திடீரென காணாமல் போயுள்ளது. இந்த சிக்கல் இந்திய ஆப் ஸ்டோர்களில் மட்டுமே பயனர்கள் எதிர்கொண்டு வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த இரண்டு தளங்களிலும் BGMI செயலிக்கான லிங்கை அக்செஸ் செய்தால் பிளே ஸ்டோரில் ‘எர்ரர்’ என வருகிறது, ஆப் ஸ்டோரில் ‘கனக்ட்டிங்’ என ஷோ ஆகிறது.

கடந்த 2020 வாக்கில் பாதுகாப்பு காரணங்களுக்காக சீன தேச செயலிகளை இந்திய அரசு தடை விதித்தது. அதில் பரவலாக பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த பப்ஜி மொபைல் கேமும் அடங்கும். தொடர்ந்து அதற்கு மாற்று எப்போது அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருந்தது.

அத்தகைய சூழலில் தென் கொரியாவை சேர்ந்த வீடியோ கேம் வடிவமைப்பு நிறுவனமான KRAFTON, Battlegrounds Mobile India என்ற கேமை வடிவமைத்தது. இதனை கடந்த 2021 ஜூலை வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதே நேரத்தில் இதனை இந்திய நாட்டுக்கான புதிய பப்ஜி வெர்ஷன் என பலரும் சொல்லி வந்தனர்.

இது கடந்த ஆண்டு அறிமுகமானதும் பலரும் அதனை ஆர்வமுடன் டவுன்லோடு செய்து விளையாடினர். இந்நிலையில், இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து மர்மமான முறையில் நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து KRAFTON நிறுவனம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேசி வருவதாக தகவல்.

இந்த செயலி குறித்த அறிவிப்பு வெளியான போது எம்.பி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த கேம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் எழுந்ததாகவும் செல்லபப்டுகிறது. அண்மையில்தான் இந்த அப்ளிகேஷனின் லேட்டஸ்ட் அப்டேட்டை KRAFTON வெளியிட்டுள்ளது. இருந்தாலும் இந்த செயலியை ஏற்கனவே தங்கள் போனில் இன்ஸ்டால் செய்துள்ள பயனர்கள் இதனை சிக்கலின்றி பயன்படுத்தி வருவதாகவும் தகவல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

19 hours ago

தொழில்நுட்பம்

19 hours ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

19 days ago

தொழில்நுட்பம்

27 days ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

மேலும்