இந்தியாவில் ரியல்மி பேட் X டேப்லெட் மற்றும் வாட்ச் 3 அறிமுகம்: விலை & சிறப்பு அம்சங்கள்

By செய்திப்பிரிவு

ரியல்மி பேட் X டேப்லெட் மற்றும் வாட்ச் 3 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் மேலும் ஐந்து டிஜிட்டல் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும். அந்த வகையில் இப்போது ஏழு டிஜிட்டல் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.

ரியல்மி பேட் X டேப்லெட், வாட்ச் 3, பட்ஸ் ஏர் 3 நியோ, பட்ஸ் வயர்லெஸ் 2S, ஃபிளாட் மானிட்டர், டேப்லெட்டை பயன்படுத்த உதவும் அக்சஸரீஸ்களான ஸ்மார்ட் கீபோர்டு மற்றும் ஸ்மார்ட் பென்சில் போன்றவற்றை ரியல்மி அறிமுகம் செய்துள்ளது.

ரியல்மி பேட் X டேப்லெட்: மூன்று விதமான வேரியண்ட்டுகளில் இந்த டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4ஜிபி + 64ஜிபி Wi-Fi ஒன்லி, 4ஜிபி + 64ஜிபி Wi-Fi + LTE மற்றும் 6ஜிபி + 128ஜிபி Wi-Fi + LTE என மூன்று வேரியண்ட்டில் இந்த டேப்லெட் கிடைக்கும். இதில் டாப் மாடலில் 5ஜி இணைப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.17999, ரூ.23999 மற்றும் ரூ.25999 விலையில் இந்த டேப்லெட் விற்பனை செய்யப்பட உள்ளது.

ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இந்த டேப்லெட் இயங்குகிறது. இரண்டு விதமான வண்ணங்களில் இது கிடைக்கும் என தெரிகிறது. 8340mAh பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.

ரியல்மி வாட்ச் 3: 1.8 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த வாட்ச். ஐபி68 ரெசிஸ்டன்ஸ், 110 வாட்ச் ஃபேஸஸ், ப்ளூடூத் காலிங் வசதி, 340mAh பேட்டரி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளது. தூக்கத்தை கணக்கிடும் டிரேக்கர், ஹார்ட் ரேட் சென்சாரும் இதில் உள்ளது. இதன் விலை ரூ.2,999.

பட்ஸ் வயர்லெஸ் 2S நெக்பேண்ட் வடிவில் ரூ.1499-க்கு கிடைக்கிறது. பட்ஸ் ஏர் 3 நியோ சாதனம் ரூ.1999-க்கு அறிமுகமாகி உள்ளது. 23.8 இன்ச் அளவில் மானிட்டர் ரூ.12,999-க்கு அறிமுகமாகி உள்ளது. இதில் சில சாதனங்களுக்கு அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

14 days ago

மேலும்