சர்வதேச அளவில் முடங்கிய ‘டீம்ஸ்’ சேவை: மீம்ஸுடன் கொண்டாடிய பல்வேறு நிறுவன ஊழியர்கள்

By எல்லுச்சாமி கார்த்திக்

சர்வதேச அளவில் மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் சேவை வியாழக்கிழமை முடங்கியதாக அதன் பயனர்கள் தெரிவித்துள்ளனர். இதனை மைக்ரோசாஃப்ட் 365 உறுதி செய்துள்ளது. அதே போல பல்வேறு இணையதள சேவை முடக்கத்தை கண்காணித்து வரும் DownDetector தளமும் இதை உறுதி செய்துள்ளது.

கரோனா முதல் அலை பரவலின்போது வீட்டில் முடங்கி இருந்த உலக மக்கள் பிறருடன் உரையாட உதவிய தளங்களில் ஒன்று மைக்ரோசாஃப்ட் டீம்ஸ். கடந்த 2017 வாக்கில் டீம்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இருந்தாலும் இந்த சேவை லைம் லைட்டுக்கு வந்தது 2019-20 காலகட்டத்தில்தான். விர்ச்சுவல் சூழலில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் தளம்தான் டீம்ஸ். கடந்த 2021 தகவலின்படி மாதந்தோறும் சுமார் 250 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் இதனை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாட்ஸ், டீம்ஸ், சேனல், குழு உரையாடல், மீட்டிங், லைவ் ஈவென்ட் என பல்வேறு விதமாக பயனர்கள் இதனைப் பயன்படுத்த முடியும். இது Proprietary சாப்ட்வேர் வகையை சார்ந்தது. இதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக பெரும்பாலான உலக நிறுவனங்கள் இதனை பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக, வீட்டிலிருந்து வேலை செய்து வரும் தகவல் தொழில்நுட்ப துறை நிறுவன ஊழியர்கள் தங்கள் அலுவல் பணிகளுக்காக இதனை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் டீம்ஸ் சேவை முடங்கியது. அதனை ஊழியர்கள் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர். "மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் இயங்கவில்லையெனில் வேலை இல்லை என அர்த்தம்", "மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் சேவை முடங்கி உள்ளதை அறிந்ததும் திட்டமிடப்பட்ட மீட்டிங்கில் பங்கேற்க வேண்டியதில்லை என குஷி ஆனேன்", "அவசரம் வேண்டாம். போதுமான நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். சிக்கல் நிவர்த்தி செய்யப்படும் வரை நாங்கள் காத்திருக்கிறோம்" என டீம்ஸ் பயனர்கள் ட்வீட் செய்துள்ளனர்.

முடக்கத்தை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் 365 தெரிவித்துள்ளது. டீம்ஸ் சேவையை அக்செஸ் செய்வது, சாட் செய்வது மற்றும் மீட்டிங்கில் பயனர்கள் சிலர் சிக்கலை எதிர்கொண்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் 365 தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

20 hours ago

தொழில்நுட்பம்

20 hours ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

19 days ago

தொழில்நுட்பம்

27 days ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

மேலும்