14 நாட்கள் பேட்டரி லைஃப் கொண்ட Mi ஸ்மார்ட் பேண்ட் 7 அறிமுகம் | விலை & சிறப்பு அம்சங்கள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சர்வதேச சந்தையில் ஜியோமியின் Mi ஸ்மார்ட் பேண்ட் 7 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் பேண்ட் குறித்த சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்ப்போம்.

கடந்த மே மாதம் சீன தேசத்தில் Mi ஸ்மார்ட் பேண்ட் 7 அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், இப்போது ஐரோப்பாவிலும் இந்த பேண்ட் அறிமுகமாகி உள்ளது. கூடிய விரைவில் இந்திய சந்தையிலும் இந்த பேண்ட் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை உறுதி செய்யும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் பேண்ட் 6 மாடலின் விலை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Mi ஸ்மார்ட் பேண்ட் 7 சிறப்பு அம்சங்கள்: 1.62 இன்ச் OLED பலவண்ண டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த டிவைஸ். முக்கியமாக இந்த பேண்டின் டிஸ்பிளே எப்போதும் ஆனில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஹார்ட் ரேட் மானிட்டர், ஸ்லீப் குவாலிட்டி இண்டக்ஸ், வாட்டர் ஃப்ரூப், 120 ட்ரைனிங் மோடுகள், ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி திறன் போன்ற அம்சங்களை இந்த பேண்ட் கொண்டுள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை சுமார் 4700 ரூபாய் இருக்கும் என தெரிகிறது. இப்போது ஐரோப்பாவில் அறிமுக ஆஃபர் விலையில் இந்த பேண்ட் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்தியாவில் இதன் அறிமுகம் எப்போது என்பது குறித்த விவரத்தை இன்னும் சியோமி தரப்பில் தெரிவிக்கப்படமால் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE