இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ‘டிஸோ வாட்ச் D’ - விலை & அம்சங்கள்

By செய்திப்பிரிவு

புது டெல்லி: இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது 'டிஸோ வாட்ச் D'. நேற்று பகல் 12 மணி முதல் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வாட்ச்சின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி டெக் லைஃப் பிராண்டான டிஸோ, கீபோர்டு போன்கள், ஸ்மார்ட்வாட்ச், ஹேர் டிரையர், ட்ரிம்மர் போன்ற பொருட்கள் மற்றும் ஆடியோ ஹெட் போன்களை விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், வாட்ச் D என்ற புதிய மாடல் ஸ்மார்ட்வாட்ச்சை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது அந்நிறுவனம். இதற்கு அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாட்ச், வாட்ச் புரோ, வாட்ச் 2, வாட்ச் R, வாட்ச் 2 ஸ்போர்ட்ஸ், வாட்ச் S மாடல்களை தொடர்ந்து இதை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது டிஸோ.

சிறப்பு அம்சங்கள்: 4.57 சென்டிமீட்டர் செவ்வக வடிவிலான டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த வாட்ச். 14 நாட்கள் வரை நீடித்து இயங்கும் பேட்டரி திறன், 150-க்கும் மேற்பட்ட வாட்ச் ஃபேசஸ், 110-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட், 5ATM வாட்டர்ப்ரூஃப், வானிலை, Find மை போன், மியூசிக் கன்ட்ரோல், ஸ்மார்ட் நோட்டிபிகேஷன், அலாரம், போன் கேமரா கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன. 50000 முறை பட்டன் டெஸ்ட், 5000 முறை பக்கிள் டெஸ்ட், 5000 முறை சார்ஜிங் டெஸ்ட் போன்ற குவாலிட்டி அசுரன்ஸை இந்த வாட்ச் பாஸ் செய்துள்ளது.

ஹார்ட் ரேட், ஸ்டெப் மானிட்டர், கலோரி டிரேக்கர், வாட்டர் ட்ரிங் ரிமைண்டர், Sedentary ரிமைண்டர் மற்றும் தூக்கத்தை கண்காணிக்கும் ஸ்லீப் மானிட்டர் போன்ற ஆரோக்கிய நலன் சார்ந்த அம்சங்களும் இதில் உள்ளன. கருப்பு, வெள்ளை, நீலம், பச்சை மற்றும் பிங்க் என ஐந்து வண்ணங்களில் இந்த வாட்ச் கிடைக்கிறது. இதன் அறிமுகம் விலையாக ரூ.1999-க்கு இந்த வாட்ச் விற்பனை செய்யப்பட்டது. இதன் அசல் விலை ரூ.2999.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

17 days ago

மேலும்