பயனர்களின் பிறந்த தேதியை உள்ளிடுமாறு கட்டாயப்படுத்தும் இன்ஸ்டாகிராம்: காரணம் என்ன?

By செய்திப்பிரிவு

கலிபோர்னியா: தங்கள் தளத்தை பயனர்கள் தொடர்ந்து தடையின்றி பயன்படுத்த பயனர்கள் தங்களது பிறந்த தேதியை உள்ளிடுமாறு கட்டாயப்படுத்தி வருகிறது இன்ஸ்டாகிராம். அதற்கான காரணம் என்ன என்பதைப் பார்ப்போம்.

மெட்டா நிறுவனத்தின் போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். கடந்த 2010-இல் தொடங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் மெட்டா (அப்போது ஃபேஸ்புக்) அதனை கையகப்படுத்தியது. இன்று உலக அளவில் மாதந்தோறும் சுமார் 1 பில்லியன் ஆக்டிவ் பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. பயனர் பாதுகாப்பு உட்பட பல்வேறு காரணங்களுக்காக இன்ஸ்டா தளத்தில் அவ்வப்போது கொள்கை முடிவுகளை மாற்றி அமைப்பது வழக்கம்.

அந்த வகையில் இப்போது தங்கள் தளத்தை பயன்படுத்தி வரும் பயனர்கள், அவர்களின் பிறந்த தேதி குறித்த விவரத்தை கட்டாயம் கொடுத்தால் மட்டுமே இன்ஸ்டாகிராம் தளத்தை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டே வயதை சரிபார்ப்பது கட்டாயமாக்கப்படும் என தெரிவித்திருந்தது இன்ஸ்டாகிராம். இப்போது அதனை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

இதிலிருந்து பயனர்கள் நழுவ வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு போலியான பிறந்த தேதி கொடுத்தாலும் அதனை தங்கள் AI தொழில்நுட்ப உதவியின் மூலம் கண்டறிந்து விடுவோம் எனவும் இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்துவதைத் தவிர்க்கும் நோக்கில் இதனை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது இன்ஸ்டாகிராம். மேலும், செல்லப்பிராணிகள் மற்றும் பிசினஸ் அக்கவுண்ட் பயனர்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்காக இன்ஸ்டாகிராம் கிட்ஸ் என்ற வெர்ஷனை கொண்டு வரும் திட்டத்தை முன்னெடுத்தது இன்ஸ்டாகிராம். இருந்தாலும் அது கிடப்பில் உள்ளது. ஏற்கெனவே தங்கள் பிறந்த தேதியை கொடுத்த பயனர்கள் தொடர்ச்சியாக தளத்தை தடையின்றி பயன்படுத்தலாம். அதே போல பயனர்களின் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் பொதுவெளியில் பகிரப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

தொழில்நுட்பம்

20 hours ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

18 days ago

மேலும்