இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி GT நியோ 3 ஸ்மார்ட்போன் | விலை & விவரம்

By செய்திப்பிரிவு

புது டெல்லி: இந்தியச் சந்தையில் ரியல்மி நிறுவனத்தின் GT நியோ 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேசத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ரியல்மி நிறுவனம். தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை ரியல்மி அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியாவில் GT நியோ 3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த போன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்: 6.7 இன்ச் டிஸ்பிளே, ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 சிப்செட், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், ட்யூயல் சிம் சப்போர்ட், பின்பக்கத்தில் மூன்று கேமரா போன்றவை உள்ளது. இதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா. 16 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் இதில் உள்ளது. 5ஜி இணைப்பு வசதி, டைப் சி சார்ஜிங் போர்ட் இதில் உள்ளது.

முக்கியமாக இந்த போன் இரண்டு பேட்டரி மற்றும் இரண்டு விதமான சார்ஜிங் சப்போர்ட் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. அதாவது 4500mAh திறன் கொண்ட பேட்டரியில் 150 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்டும், 5000mAh திறன் கொண்ட பேட்டரியில் 80 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்டும் உள்ளது. பேட்டரி திறன் மற்றும் ஸ்டோரேஜ் வசதிக்கு ஏற்ற வகையில் போனின் விலை மாறுபடுகிறது.

80 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் உடன் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ள போனின் விலை 36,999 ரூபாய். 80 வாட்ஸ், 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ள போனின் விலை 38,999 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 150 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட போனின் விலை 42,999 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 4-ஆம் தேதி முதல் இந்த போன் விற்பனை தொடங்க உள்ளது. அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 50 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட போனை 5 நிமிடத்தில் 50 சதவீதம் சார்ஜ் செய்து விடலாம் என ரியல்மி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

19 days ago

தொழில்நுட்பம்

19 days ago

மேலும்