ஸ்மார்ட் வாட்டர் பாட்டில் விற்பனையில் களமிறங்கிய ஆப்பிள் - விலை & விவரம்

By செய்திப்பிரிவு

கலிபோர்னியா: ஸ்மார்ட் வாட்டர் பாட்டில் விற்பனையில் களம் இறங்கியுள்ளது அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஆப்பிள் நிறுவனம். அதன் விவரங்கள் மற்றும் விலை குறித்து பார்ப்போம்.

ஐபோன், ஐபேட் மாதிரியான டிஜிட்டல் சாதனங்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது ஆப்பிள் நிறுவனம். அதற்காகவே சந்தையில் தனக்கென ஒரு பெயரையும் வாங்கியுள்ளது. தற்போது அதன் புராடெக்ட்டுகளை விரிவுபடுத்தும் நோக்கில் புது முயற்சியாக ஸ்மார்ட் வாட்டர் பாட்டில் விற்பனையில் களம் இறங்கியுள்ளது. இதற்காக ஹைட்ரேட் ஸ்பார்க் என்ற நிறுவனத்துடன் இணைந்துள்ளது ஆப்பிள்.

ஹைட்ரேட் ஸ்பார்க் நிறுவனம் டிஜிட்டல் வாட்டர் பாட்டில்களை விற்பனை செய்து வருகிறது. இப்போது ஆப்பிளுடன் கைகோர்த்துள்ளது. இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த ஸ்மார்ட் வாட்டர் பாட்டிலை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

ஐபோன், ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் உடன் இந்த பாட்டிலை பயனர்கள் ஸிங் (Sync) செய்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி செய்து விட்டால் பயனர்கள் தண்ணீர் குடிக்க வேண்டிய நேரத்தில் இந்த பாட்டிலில் உள்ள எல்.இ.டி லைட்டுகள் ஒளிர்ந்து நோட்டிபிகேஷன் கொடுக்கும் என சொல்லப்பட்டுள்ளது. ஆப்பிள் ஹெல்த் அப்ளிகேஷன் துணையுடன் இந்த பாட்டில்கள் இயங்குமாம். பயனர்களின் உடல் இயக்கத்தை டிராக் செய்து அதற்கு ஏற்ற வகையில் தண்ணீர் குடிப்பது தொடர்பாக இந்த பாட்டில் நினைவுபடுத்தும் என தெரிகிறது.

ஹைட்ரேட் ஸ்பார்க் ப்ரோ பாட்டில் விலை ரூ.4,592க்கும், ஹைட்ரேட் ஸ்பார்க் ப்ரோ ஸ்டீல் ரூ.6,126க்கும் கிடைக்கும் என தெரிகிறது. இருந்தாலும் தற்போதைக்கு இது அமெரிக்க சந்தையில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE