இந்தியாவில் அறிமுகமானது iQoo Z6 Pro 5G மற்றும் iQoo Z6 4G ஸ்மார்ட்போன்

By செய்திப்பிரிவு

புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது iQoo Z6 Pro 5G மற்றும் iQoo Z6 4G ஸ்மார்ட்போன்கள். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்தும் பார்க்கலாம்.

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான iQoo நிறுவனம் அதன் சமீபத்திய வெளியீடாக Z சீரிஸ் வரிசை போனில் iQoo Z6 Pro 5G மற்றும் iQoo Z6 4G ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு போன்களும் மூன்று வேரியண்ட்டுகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மூலம் இந்த போன்கள் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

iQoo Z6 Pro 5G: 6.44 இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப், பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 64 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா. 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இந்த போனில் இடம் பெற்றுள்ளது. 5ஜி இணைப்பு வசதி, டைப் சி சார்ஜிங் போர்ட், 4,700mAh பேட்டரி, 66 வாட்ஸ் பிளேஷ் சார்ஜ் சப்போர்ட், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியில் இந்த போன் கிடைக்கிறது. இதன் விலை 23,999 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது.

iQoo Z6 4G: டிஸ்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் போன்றவை iQoo Z6 Pro 5G போனில் இருப்பது தான். ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 680 சிப், பின்பக்கத்தில் உள்ள மூன்று கேமராவில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 5000mAh பேட்டரி, 44 வாட்ஸ் பிளேஷ் சார்ஜ் சப்போர்ட் மாதிரியானவை இந்த போனில் இடம் பெற்றுள்ளது. 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியில் இந்த போன் கிடைக்கிறது. இதன் விலை 14,499 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

19 days ago

தொழில்நுட்பம்

19 days ago

மேலும்