பொதுவாக மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களுக்கு நடிகர்கள் பிராண்ட் அம்பாசிடர்களாக (விளம்பர தூதர்கள்) இருப்பது வழக்கம். ஆனால் ஹிந்தி நடிகர் அமிர்கானை சமீபத்தில் பஜாஜ் நிறுவனம் வெளியிட்ட வி 15 மோட்டார் சைக்கிள் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே 1971-ம் ஆண்டு நடந்த போரில் முக்கிய பங்காற்றிய ஐஎன்எஸ் விக்ராந்த் விமானந் தாங்கி போர் கப்பல் சமீபத்தில் கடற்படையிலிருந்து ஓய்வு பெற்றது. இந்தக் கப்பலின் இரும்பை உருக்கி அதில் ஒரு பகுதியை வி 15 மோட்டார் சைக்கிளில் பயன்படுத்துவதாக பஜாஜ் நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான வி 15 மோட்டார் சைக்கிள் 150 சிசி திறன் கொண்டதாகும். இந்த மோட்டார் சைக்கிளை வாங்க முன் பதிவு செய்த முக்கியப் பிரமுகர்களில் அமிர்கானும் ஒருவர்.
இதை அறிந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்கநர் ராஜீவ் பஜாஜ், அமிர்கானுக்கு டெலிவரி செய்யப்படும் வாகனத்தில் சிறப்பு அம்சமாக அதன் பெட்ரோல் டேங்கில் ``ஏ’’ என்ற எழுத்தைப் பொறித்து கொடுத்துள்ளார். அதாவது அமிர்கானின் முதல் எழுத்து ஏ என்பதாகும். அத்துடன் பின் இருக்கையின் பகுதியில் ``சோட்டே லால்’’ என்று அழகாக எழுதப்பட்டுள்ளது. ``சோட்டே லால்’’ என்று அமிர்கான் ஹிந்திப் பட உலகில் அழைக்கப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமீர்கானின் வீட்டுக்குச் சென்று நேரடியாக டெலிவரி செய்துள்ளார் ராஜீவ் பஜாஜ்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
11 hours ago
தொழில்நுட்பம்
11 hours ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
21 days ago
தொழில்நுட்பம்
21 days ago
தொழில்நுட்பம்
24 days ago
தொழில்நுட்பம்
25 days ago
தொழில்நுட்பம்
26 days ago