சந்தையில் அறிமுகமானது ஒப்போ A57 ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள்

By செய்திப்பிரிவு

டுங்க்வான்: சீன எலக்ட்ரானிக் சாதன உற்பத்தி நிறுவனமான ஒப்போ, A57 என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஒப்போ A56 ஸ்மார்ட்போனுக்கு சந்தையில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மலிவான விலையில் வெளியாகியுள்ள இந்த போன் சந்தையில் போட்டி நிறுவனங்களுக்கு விற்பனையில் கடுமையான சவாலை கொடுக்கும் என தெரிகிறது. முதற்கட்டமாக இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் மற்ற நாடுகளின் சந்தையில் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6.56 இன்ச் டிஸ்பிளே, ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 810 புராஸசர், 8ஜிபி ரேம், 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், பின்பக்கத்தில் இரண்டு கேமரா, 8 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா, 5000mAh பேட்டரி, டைப் சி சார்ஜிங் போர்ட் மாதிரியான அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

5ஜி சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போன். சீன கரன்சியில் இந்த போனின் விலை 1500 சிஎன்ஒய் என தெரிகிறது. இதன் இந்திய மதிப்பு 18000 ரூபாயாகும். இந்த போனுடன் சார்ஜர் மற்றும் புரொட்டக்டிவ் கேஸ் கவர் வருகிறது. மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE