சாம்சங் கேலக்ஸி A33 5ஜி ஸ்மார்ட்போன் | சாதக - பாதகங்கள் என்னென்ன: ஒரு பார்வை

By எல்லுச்சாமி கார்த்திக்

சாம்சங் நிறுவனம் அண்மையில் A33 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருந்தது. இருந்தாலும் இந்திய சந்தையில் இதன் விலை குறித்த விவரம் வெளியிடப்படாமல் இருந்தது.

தற்போது அதன் விலை குறித்த விவரம் வெளியாகியுள்ளது. ரூ.28,499 முதல் இந்த போன் இந்தியாவில் விற்பனையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் ஒன்பிளஸ் நார்ட் 2 மற்றும் ஜியோமி 11ஐ போன்களுக்கு விற்பனையில் கடுமையான போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனின் சாதகங்கள் மற்றும் பாதகங்களை பார்க்கலாம்.

சிறப்பம்சங்கள்

ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 6.4 இன்ச் டிஸ்பிளே, ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 1280 சிங்கிள் சிப், 6ஜிபி மற்றும் 8ஜிபி என இரண்டு ரேம் வேரியண்ட், பின்பக்கத்தில் நான்கு கேமரா. அதில் பிரதான கேமரா 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. டைப் சி சார்ஜிங் போர்ட், 13 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா இதில் உள்ளது.

சாதகங்கள் மற்றும் பாதகங்கள்

+இதன் திரையைப் பொறுத்தவரையில் துல்லியமான ஹெச்.டி திரை கொண்டுள்ளது இந்த போன். 6.4 இன்ச் கொண்டுள்ள இதன் டிஸ்ப்ளே பயனர்களுக்கு கன்டென்டுகளை சங்கடமின்றி தெளிவாக பார்க்க உதவும் என சொல்லப்பட்டுள்ளது. 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டும் இதில் உள்ளது.

+நீண்ட நாள் சாப்ட்வேர் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போனின் முக்கியமான பலமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கான ஆண்ட்ராய்டு இயங்குதள அப்டேட் மற்றும் நான்கு ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட் இதில் கிடைக்கிறது. இதுவே முப்பாதாயிரம் விலைக்கு கீழ் கிடைக்கும் மற்ற போன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதள அப்டேட் இரண்டு ஆண்டுகளுக்கும், செக்யூரிட்டி அப்டேட் மூன்று ஆண்டுகளுக்கும் மட்டுமே கிடைக்கிறது. அதனால் நீண்ட நாட்கள் போனை மாற்ற விரும்பாத பயனர்கள் இதனை பயன்படுத்தலாம்.

+இந்த போன் ஐபி67 ரேட்டிங்கில் கிடைக்கிறது. அதாவது டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூப் உத்தரவாதம் இதில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மீட்டர் தண்ணீரில் முப்பது நிமிடங்கள் வரையில் இருந்தாலும் சேதமின்றி சர்வைவாகும் தன்மை இந்த போனுக்கு உள்ளதாம். இதே விலை பிரிவில் இந்தியாவில் கிடைக்கும் மற்ற போன்களில் இந்த அம்சம் கிடையாது என சொல்லப்படுகிறது.

+இந்த போனின் மற்றொரு சாதகமாக அமைந்துள்ளது அதன் பேட்டரி திறன். 5000mAh பேட்டரி இந்த போனில் உள்ளது.

+டால்பி அட்மாஸ் சப்போர்ட் கொண்ட டியூயல் ஸ்பீக்கர்கள் இந்த இடம்பெற்றுள்ளது. இந்த விலை பிரிவில் கிடைக்கும் அனைத்து போன்களிலும் இந்த அம்சம் இருப்பது வழக்கம்.

-இந்த போனின் பாதகமாக அமைந்துள்ளது அதன் சார்ஜிங் வேகம். 25 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்டை கொண்டுள்ளது இந்த போன். இது பயனர்களுக்கு சங்கடத்தை கொடுக்கலாம் என சொல்லப்படுகிறது.

-இந்த போனின் பாக்ஸில் சார்ஜர் இடம் பெறவில்லை. அதனால் பயனர்கள் தங்களிடம் உள்ள பழைய சார்ஜரை பயன்படுத்த வேண்டும். அதனை விரும்பாதவர்கள் புதிய சார்ஜரை வாங்க வேண்டும். அதற்கு போன் விலையுடன் சேர்த்து கூடுதலாக சார்ஜருக்கும் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஸ்மார்ட்போன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங்கள் சில சுற்றுச்சூழல் காரணமாக புதிய போனுடன் சார்ஜர்கள் கொடுப்பதை நிறுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE